search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவாஸ்கர்-ரிஷப் பண்ட்
    X
    கவாஸ்கர்-ரிஷப் பண்ட்

    எங்கே நிற்க வேண்டும் என நடுவர் முடிவு செய்வதா?- ரிஷப்பண்ட் பேட்டிங்கும் கவாஸ்கரின் விமர்சனமும்

    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 3வது போட்டி நடந்து வருகிறது.
    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்டில் ரிஷப்பண்ட் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 3வது போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்யும் போது நடுவர் சொன்ன ஒரு விவகாரத்தைத் தான் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

    முதல் இன்னிங்சின் போது ரிஷப்பண்ட் பேட்டிங் கிரீஸுக்கு வெளியில் வந்து விளையாடினார் என்றும், அப்படி விளையாடக் கூடாது என்றும் நடுவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

    இது பற்றி கவாஸ்கர், 'ஒரு பேட்ஸ்மேன் கிரிக்கெட் பிட்ச்சில் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். அதைத் தீர்மானிக்கும் உரிமை மற்றவர்களுக்கு கிடையாது' என்றார்.

    இதைத் தொடர்ந்து ரிஷப்பண்ட், 'பிட்ச்சில் மிகவும் பாதிப்புக்கு உள்ளான இடத்தில் எனது கால் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் நிற்க கூடாது என்று நடுவர் கூறினார். அதனால் தள்ளி நின்றேன்' என்றார். பண்ட் முதல் இன்னிங்சில் 9 பந்துகளே விளையாடி 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×