என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோக்கியோ பாராலிம்பிக்கில், இன்று நடைபெற்ற வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகேஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார். 

    இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2ம் தரநிலை வீராங்கனையான போரிஸ்லாவை (செர்பியா) 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா.

    இதேபோல், ஆடவருக்கான வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகேஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார். அவர் மொத்தம் 699 புள்ளிகளைப் பெற்றார். இறுதிச்சுற்றில் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
    இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால் மட்டுமே இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும்.
    லீட்ஸ்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மொத்தம் 40.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெட்டும் ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள், இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ரன் குவித்தனர். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில,  8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்திருந்தது. 

    இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 432 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இந்திய அணியின் ஸ்கோரைவிட 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 355 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இமாலய இலக்குடன், இந்தியா தனது 2வது இன்னிங்சை ஆடுகிறது. டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். 

    முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்சில் விஸ்வரூபம் எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், இங்கிலாந்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஒரு வித்தியாச முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் தன் அணியின் சக வீரரான ஷிகர் தவானின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

    தற்போது இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளிலும், தற்போது நடந்து வரும் 3வது போட்டியிலும் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் சர்ச்சையாகி வருகிறது.

    இந்நிலையில் அஷ்வின், இங்கிலாந்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். அவர் ஒரு புதுமைக்காக இடது கை பேட்டிங் பயிற்சி செய்துள்ளார். இது குறித்த படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ரவிச்சந்திரன் அஷ்வின்

    அதில் ஷிகர் தவான்,  'ஒரு இடது கை பேட்ஸ்மேனாக நன்றாக இருக்கிறீர்கள். கிளாஸி' என்று கமென்ட் பதிவிட்டுள்ளார். அஷ்வினின் போஸ்ட்டும் தவானின் கமென்ட்டும் தற்போது வைரலாகி வருகிறது.
    லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மோசமான செயல்பாடு எங்களை சோர்வுக்கு கொண்டு செல்லாது என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.  இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்னில் சுருண்டது. முதல்நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது.

    அந்த அணி வீரர்கள் ரன்களை குவித்தனர். தொடக்க வீரர்களான பர்ன்ஸ் 61 ரன்னும், ஹமீத் 68 ரன்னும், தாவித் மலான் 70 ரன்னும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மீண்டும் சதம் அடித்தார். அவர் 121 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் அடித்துள்ள 3-வது சதம் இதுவாகும்.

    நேற்றைய 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் எடுத்துள்ளது. அந்த அணி இதுவரை 345 ரன் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்தின் கையே முழுமையாக ஓங்கி இருக்கிறது.

    2-வது டெஸ்டில் சிறப்பாக பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 3-வது டெஸ்டில் தொடக்கத்திலேயே விக்கெட்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க தவறிவிட்டனர். இதனை பயன்படுத்திக் கொண்ட அவர்கள் ரன்களை குவித்துள்ளனர்.

    நேற்றைய 2-ம் நாள் ஆட்டம் முடிந்தபிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி காணொலி காட்சி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் 3-வது டெஸ்டில் இந்தியாவின் மோசமான செயல்பாடு அணியை மன ரீதியாக எவ்வாறு பாதிக்கிறது என்று கேள்வி கேட்டனர். அதற்கு முகமது ‌ஷமி கூறியதாவது:-

    அது மன ரீதியாக எங்களை பாதிக்காது. நாங்கள் 3 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடித்திருக்கிறோம். பல போட்டிகளை 2 நாட்களிலேயே முடித்திருக்கிறோம். சில நேரங்களில் நமக்கு ஒரு மோசமான நாள் அல்லது ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சிலேயே நாம் வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். இது சில நேரங்களில் நடக்கும்.

    ஆனால் அதற்காக சோர்வாக உணர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ளன. நாங்கள் 1-0 என்ற நிலையில் இருக்கிறோம். எனவே எதிர்மறையாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு வி‌ஷயம் உங்கள் திறமையை நம்புங்கள். நீங்கள் மீண்டு வருவீர்கள்.

    எதிரணியினர் நீண்ட பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தும்போது அதை தடுக்கும் பொறுப்பு பந்து வீச்சாளர்களுக்கு உள்ளது. விக்கெட்டுகளை வீழ்த்துவது எங்களது பணி. பேட்ஸ்மேன்களை எவ்வாறு அவுட் ஆக்க வேண்டும் என்பதை மனதில் திட்டமிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா காரணமாக பல வீரர்கள் விலகிய நிலையில், பஞ்சாப் அணி இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷித்தை ஒப்பந்தம் செய்துள்ளது.
    கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

    சில அணிகள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இப்போட்டி தொடரில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

    பஞ்சாப் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சட்சன்னுக்கு பதிலாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷித் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலியா வின் மெரிடித்துக்குப் பதில் அந்த நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸ் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கொல்கத்தா அணியில் கம்மின்ஸ்சுக்கு (ஆஸ்திரேலியா) பதிலாக டிம் சவுதி (நியூசிலாந்து) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஃபார்ம் இழந்து ரன்கள் குவிக்க தவித்து வருவது அணிக்கு மிகப்பெரிய பாதகமாக இருந்து வருகிறது.
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சமீப காலமாக பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அவர் கடைசியாக விளையாடிய 50 இன்னிங்சில் சதம்கூட அடிக்கவில்லை.

    தற்போது நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மேலும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பந்து வீச்சில் திணறி வருகிறார். இதனால் விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

    இந்த நிலையில் தெண்டுல்கரிடம் கோலி ஆலோசனை பெற வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிராக குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்னுக்கு எதிராக விராட் கோலி திணறி வருவதால், இப்பிரச்சினையை தீர்க்க அவர் சச்சின் தெண்டுல்கரை தொடர்பு கொள்ள வேண்டும். தெண்டுல்கரிடம் நான் என்ன செய்ய வேண்டும்? என்று விராட் கோலி கேட்க வேண்டும். அவரிடம் ஆலோசனைகளை கேட்டு பெற வேண்டும்.

    விராட் கோலியின் பேட்டிங் எனக்கு கொஞ்சம் கவலை அளிக்கிறது. ஏனென்றால் அவர் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் அவுட் ஆகிறார். 2014-ம் ஆண்டிலும் இதே போன்று ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளில் அதிகமுறை அவுட் ஆகி இருந்தார்.

    சச்சின் தெண்டுல்கர்

    2003-04-ம் ஆண்டில் சிட்னி டெஸ்டில் தெண்டுல்கர் செயல்படுத்திய முறைகளை கோலி பின்பற்ற வேண்டும். அந்த டெஸ்டில் கவர் டிரைவ் ஷாட்டை விளையாடப் போவதில்லை என்று தெண்டுல்கர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தெண்டுல்கர் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளை அடிக்காமல் விட்டுவிட்டார். இதன் மூலம் அவர் அந்த தொடரில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டோக்கியோ பாராலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.  மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

    டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் 4வது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார்.  இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவீனா காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மீண்டும் சதமடித்து அசத்தினார்.
    லீட்ஸ்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து பந்துவீச்சில் சிக்கிய இந்திய அணியால் அதிலிருந்து மீள முடியவில்லை. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேற சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.   

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெட்டும் ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்தது.

    விக்கெட் வீழ்த்திய ஷமியை பாராட்டும் சக வீரர்கள்

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து 135 ரன் எடுத்த நிலையில் ரோரி பர்ன்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஹசீப் ஹமீத் 68 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய தாவித் மலான், ஜோ ரூட்டுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 139 ரன்கள் சேர்த்தது. தாவித் மலான் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 121 ரன்னில் அவுட்டானார்.

    பேர்ஸ்டோவ் 29 ரன், ஜோஸ் பட்லர் 7 ரன், மொயின் அலி 8 ரன், சாம் கர்ரன் 15 ரன் எடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட், சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட், பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    தொடக்க நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி தற்போது 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது.
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய வீரர்கள் நிலை குலைந்தனர். 40.4 ஓவர்களில் இந்தியா 78 ரன்னில் சுருண்டது.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் எடுத்த 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். ரோகித்சர்மா (19 ரன்), ரகானே (18) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள்.

    ஆண்டர்சன், ஓவர்டென் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், சாம்கரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர்களான ஹசீப் ஹமீது 60 ரன்னும், ராய்பர்னஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    தொடக்க நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி தற்போது 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது.

    ரி‌ஷப் பண்ட்

    டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மளமளவென வீழ்ந்தனர்.

    கடந்த 10 டெஸ்டில் டாசில் தோற்ற விராட் கோலி இந்த முறை டாசை வென்றார். ஆனால் அவர் எடுத்த முடிவு அணிக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தி விட்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். 2-வது இன்னிங்சில் இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கிறது.

    இந்தநிலையில் முதலில் பேட்டிங் செய்தது ஒட்டு மொத்த முடிவாகும் என்று விராட் கோலிக்கு விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரி‌ஷப் பண்ட் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    நேற்று காலை ஆடுகளம் பந்து வீச்சுக்கு உகந்த நிலையில் இருந்தது. இதை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் நேர்த்தியாக வீசினார்கள். முதலில் பேட்டிங் செய்வது என்பது அணியின் ஒட்டு மொத்த முடிவாகும். எந்த முடிவாக இருந்தாலும் அது அணியை சார்ந்ததுதான்.

    தினமும் பேட்டிங் 100 சதவீதத்தில் இருக்காது. சில நேரங்களில் அது சரியாக அமையாமல் போகும். அதையே நினைத்துக் கொண்டு இருக்க முடியாது. தவறில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.

    இவ்வாறு ரி‌ஷப்பண்ட் கூறி உள்ளார்.
    எனது தாயார் மன உறுதி மிக்கவர். அவரிடம் இருந்து நான் நிறைய நம்பிக்கையை பெற்றிருக்கிறேன் என்று உலக ஜூனியர் தடகளத்தில் பதக்கம் வென்ற ஷைலி கூறினார்.
    புதுடெல்லி:

    கென்யாவில் சமீபத்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்தியா 3 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. நீளம் தாண்டுதலில் ஷைலி சிங், 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் அமித் காத்ரி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பிரியா மோகன், பரத் ஸ்ரீதர், சுமி, கபில் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் வெண்கலப்பதக்கமும் வென்றனர். பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

    6.59 மீட்டர் நீளம் தாண்டி அசத்திய 17 வயதான ஷைலி சிங் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவரது தாயார் வினிதா தையல் தொழிலாளி. இதில் கிடைத்த வருமானத்தை கொண்டு தான் 3 பிள்ளைகளை வளர்க்க வேண்டி இருந்தது. அத்துடன் ரூ.3 ஆயிரம் வீட்டு வாடகையும் கொடுக்க வேண்டி இருந்ததால் மிகவும் சிரமப்பட்டார். இதற்கு மத்தியில் தடகளத்தில் ஆர்வம் காட்டிய ஷைலி பெங்களூருவில் உள்ள அஞ்சு பாபி ஜார்ஜ் அகாடமியில் இணைந்த பிறகு தான் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

    பாராட்டு விழாவின்போது உருக்கமாக பேசிய ஷைலி சிங் ‘ தடகளத்தில் எனது பயணத்தை தொடங்கிய போது உணவு கட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன். முன்னாள் தடகள வீராங்கனையான அஞ்சு ஜார்ஜ் எனது திறமையை அறிந்து, என்னை பெங்களூருவுக்கு பயிற்சிக்கு அழைத்தபோது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். அப்போது எனது தாயாரிடம் நலம் விரும்பிகள் நிறைய பேர், ‘அவளை ஏன் தனியாக அனுப்ப வேண்டும். அது சரிப்பட்டு வராது’ என்று சொன்னார்கள். ஆனால் எனது தாயார், அவள் எனது மகள். அவளை பற்றி எனக்கு தெரியும். நான் அனுப்பி வைப்பேன் என்று கூறினார். எனது தாயார் மனஉறுதி மிக்கவர். அவரிடம் இருந்து நான் நிறைய நம்பிக்கையை பெற்றிருக்கிறேன். பெங்களூரு வந்த பிறகு தான் எனது விளையாட்டு வாழ்க்கை முறையே மாறியது’ என்றார்.
    சென்னையைச் சேர்ந்த சத்யன் ஒற்றையர் பிரிவில் வென்ற 3-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.
    ஒலாமாக்:

    செக்குடியரசு சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி அங்குள்ள ஒலாமாக் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் சுவீடனின் துருல்ஸ் மோர்கார்த்தை தோற்கடித்த இந்திய வீரர் சத்யன் இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் யெவின் பிரைஸ்செபாவை நேற்று எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சத்யன் 11-0, 11-6, 11-6, 14-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து பட்டத்தை தனதாக்கினார். சென்னையைச் சேர்ந்த சத்யன் ஒற்றையர் பிரிவில் வென்ற 3-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.
    தொடக்க பேட்ஸ்மேன்கள் இருவரும் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தார் இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஐந்தாவது பந்தில் கே.எல். ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    அதோடுமட்டுமல்லாமல் புஜாரா (1) விராட் கோலி (7) ஆகியோர் அடுத்தடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் வீழ்ந்தனர். இதனால் இந்தியா 21 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் 78 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து அணி வீரர்கள்



    இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெடும் ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். முதல்நாள் ஆட்டம் முடியும் வரை இந்த ஜோடி ஆட்டமிழக்கவில்லை. இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போதுவரை இந்தியாவை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    ×