என் மலர்
செய்திகள்

அரை சதமடித்த கெவின் ஓ பிரையன்
2வது டி20 போட்டி- 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது அயர்லாந்து
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அயர்லாந்து வீரர் ஷேன் கேட்காடே 3 விக்கெட் வீழ்த்தினார்.
டப்ளின்:
ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
இந்நிலையில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 64 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மில்டன் ஷம்பா, ரியான் பர்ல் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. ஷம்பா 46 ரன்னுடனும், பர்ல் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்ட்ரிங் 37 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கெவின் ஓ பிரையன் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஜார்ஜ் டாக்ரெல் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், அயர்லாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி தொடரில் 1-1 என சமனிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது கெவின் ஓ பிரையனுக்கு அளிக்கப்பட்டது..
Next Story






