search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஷ்வின்
    X
    அஷ்வின்

    அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்காதது பைத்தியக்காரத்தனம் -முன்னாள் வீரர்கள் காட்டம்

    ஓவல் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், அஷ்வின் பெயர் விடுபட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறி உள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தின் பிட்ச், 4வது மற்றும் 5வது நாளில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அஷ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    இந்த போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது மிகப்பெரும் தவறு, இது பைத்தியக்காரத்தனமான முடிவு என்று காட்டமாக கூறி உள்ளார் வாகன். 

    இதேபோல் அஸ்வினை இந்த போட்டியில் சேர்க்காதது வியப்பை அளித்ததாக முன்னாள் வீரர்கள் லிசா ஸ்தலேகர், டாம் மூடி ஆகியோர் கூறி உள்ளனர். 

    இந்த தொடரில் நான்காவது முறையாக ஆடும் லெவனில் இருந்து அஷ்வின் நீக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக புகழ்பெற்ற வர்ணனையாளர்கள் ஆலன் வில்கின்ஸ் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் கூறி உள்ளனர். 

    ஓவல் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், அஷ்வின் பெயர் விடுபட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறி உள்ளார். அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோரை சேர்க்காததன் மூலம் தோல்வியை விரும்புவது போல் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் ரசிகர்களும் தங்கள் கருத்தையும் ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பதிவிட்டுள்ளனர்.
    Next Story
    ×