என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்வதேவ்
    X
    மெட்வதேவ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ், சிட்சிபாஸ் 3-வது சுற்றுக்கு தகுதி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான மெட்வதேவ், சிட்சிபாஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரான டேனியல் மெட்வதேவ் (ரஷியா)- டொமினிக் கோபர் (ஜெர்மனி) மோதினார்கள்.

    இதில் மெட்வதேவ் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 6-7 (4-7), 6-0 என்ற செட் கணக்கில் பிரான்சை சேர்ந்த அட்ரியனை தோற்கடித்தார்.

    இதேபோல 5-ம் நிலை வீரரான ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா), சுவார்ட்மேன் (அர்ஜெண்டினா), பாடிஸ் டுடா அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 12-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹாலப் (பெல்ஜியம்) 2-வது சுற்றில் சுலோவாக்கியாவை சேர்ந்த கிறிஸ்டியானா குச்கோவாவை எதிர்கொண் டார். இதில் ஹாலப் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    சிட்சிபாஸ்

    மற்றொரு ஆட்டத்தில் 18-வது வரிசையில் உள்ள விக்டோரியா அசரென்கா (பெனாரஸ்) 6-3, 7-6, (7-1) என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பலோடியை தோற்கடித்தார்.

    3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்), 5-ம் நிலை வீராங்கனையான சுவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
    Next Story
    ×