search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவோமி ஒசாகா
    X
    நவோமி ஒசாகா

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறினர்.
    நியூயார்க்:

    பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 73-ம் நிலை வீராங்கனையான 18 வயது லேலா பெர்னாண்டசை (கனடா) எதிர்கொண்டார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய ஒசாகா 2-வது செட்டை டைபிரேக்கரில் பறிகொடுத்தார். இதனால் அடுத்த செட்டில் உத்வேகத்துடன் செயல்பட்ட லேலா பெர்னாண்டஸ் அதனை கைப்பற்றியதுடன் பட்டத்தை தக்க வைக்கும் ஒசாகாவின் ஆசைக்கும் ஆப்பு வைத்தார்.

    சுமார் 2 மணி 4 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் லேலா பெர்னாண்டஸ் 5-7, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்து நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    தோல்விக்கு பிறகு நவோமி ஒசாகா கண்ணீர் மல்க கூறுகையில், இந்த தோல்வி குறித்து வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். இந்த சூழ்நிலையில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக உணருகிறேன் என்றார்.

    நவோமி ஒசாகா மன அழுத்தம் காரணமாக கடந்த மே மாதம் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இருந்து விலகினார். அடுத்து நடந்த விம்பிள்டன் போட்டியில் இருந்தும் முழுமையாக ஒதுங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×