என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தேசியக் கொடியுடன்  அவனி லெகாரா, ஜப்பான் கொடியுடன் ஜப்பான் வீரர்கள்
    X
    இந்திய தேசியக் கொடியுடன் அவனி லெகாரா, ஜப்பான் கொடியுடன் ஜப்பான் வீரர்கள்

    பாராலிம்பிக் நிறைவு விழா கோலாகலம்... இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்ற அவனி லெகாரா

    பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது.

    இன்று மாலை கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் காட்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளின் அணிகளும், தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுத்து வந்தன. 

    இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்ற இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
    Next Story
    ×