search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி இன்று அறிவிப்பு?

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன.
    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந் தேதி தொடங்கி நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் இருந்து விளையாடும்.

    இலங்கை, வங்காள தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. வருகிற 10-ந் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று முடிவடைகிறது.

    இந்த போட்டி முடிந்த பிறகோ அல்லது அதற்கு முன்போ தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்யலாம். ஒருவேளை இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படாவிட்டால் நாளை அறிவிக்கப்படும்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன.

    நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று அணிகளுடன் நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் மோதுகின்றன.

    Next Story
    ×