என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதையடுத்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
    லண்டன்:

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-1 என்ற முன்னிலையில் இருந்த இந்திய அணி, கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்க தயாராக இருந்தது. ஆனால்,  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து போட்டியை ரத்து செய்திருப்பதாக தெரிகிறது. இந்த போட்டியை பின்னர் நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்துகிறது. 

    இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பணியாற்றிய நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் இந்திய அணியினர் யாரும் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அதேசமயம் கொரோனா பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்தது. எனினும், 5-வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டதால் அணி வீரர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை சமூக வலைத்தளங்கள் வாயிலாக கொட்டித் தீர்த்தனர்.

    இது ஒரு அற்புதமான தொடர் என்றும், போட்டியை ரத்து செய்திருப்பது அவமானம் என்றும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    போட்டி ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறி உள்ளார். மேலும், பிரிட்டனில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் சீசன் தொடங்கும் போது, தொடக்க ஆட்டத்தை பாதிக்குமா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியா மீது குற்றம் சாட்டினார். இது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

    20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணிப் பட்டியலில் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினுக்குத் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இன்று நடக்க வேண்டிய 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு இந்திய நிர்வாகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    இப்படியான சூழலில் தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணிப் பட்டியலில் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினுக்குத் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டனும், இன்னாள் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், 'அஸ்வினை இந்திய அணியில் மீண்டும் சேர்த்துள்ளது நல்ல செய்தி தான். ஆனால் விளையாடும் 11 பேரில் அவர் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவரை ஆறுதல்படுத்துவதற்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிடிருக்கலாம்' என்று சூசகமாக பேசியுள்ளார்.
    இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
    மான்சஸ்டர்,

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மான்சஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கவிருந்தது. 

    இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

    இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், '5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். எனவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது குறித்த மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்போம்' என்று தெரிவித்துள்ளது. 



    மத்தியப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா என்பவர், பிசிசிஐ அமைப்புக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
    சென்னை:

    இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அமைப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமான முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனிக்கு 'மென்டார்' பொறுப்பு கொடுக்கப்பட்டது.

    இப்படி கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா என்பவர், பிசிசிஐ அமைப்புக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில், 'டோனியை இந்திய அணியின் நிர்வாக பொறுப்பில் நியமித்துள்ளது முரணானது. காரணம், பிசிசிஐ-யின் விதிமுறைகள்படி ஒரு நபர் இரண்டு பொறுப்புகளை வகிக்க முடியாது. தற்போத டோனி, ஐபிஎல் அணியான சி.எஸ்.கே.வின் கேப்டனாக உள்ளார். இப்படி இரண்டு பொறுப்புகளை வகிப்பது விதிகளுக்கு முரணானது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது குறித்து பிசிசிஐ தரப்பு, தங்களுடைய சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வருகிறது. புகாரில் தெரிவிக்கப்பட்டது போல டோனியின் நியமனம் விதிகளுக்கு முரணாக இருந்தால் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.
    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    காபூல்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கேப்டனாக ரஷித் கான் அறிவிக்கப்பட்ட அந்த அணியில், இரண்டு மாற்று வீரர்கள் உள்பட மொத்தம் 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார். 

    உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும்போது கேப்டன் என்ற முறையில் தேர்வுக் குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    ரஷித் கான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது நபி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
    லண்டன்:

    இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற உள்ளது.

    இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் யோகிஷூக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், உடற்பயிற்சியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்திய வீரர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தொற்று பரவவில்லை என தெரிய வந்துள்ளது. 

    இந்திய வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதால், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
    பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    புதுடெல்லி:

    மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்டு 24-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

    வேறு எந்த பாராலிம்பிக்கிலும் இல்லாத வகையில் ஜப்பானில் நடந்த பாராலிம்பிக்கில் இந்தியர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. அதிக பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தனர்.

    இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என ஆக மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்தது. அவனி லெகரா, மனிஷ் நார்வல் (துப்பாக்கி சூடுதல்), பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் (பேட் மிண்டன்), சிமாஅன்டில் (ஈட்டிஏறிதல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தனர்.

    தமிழக வீரர் மாரியப்பன், பிரவீன்குமார், நிஷாத்குமார் (உயரம் தாண்டுதல்), பவினா படேல் (டேபிள்டென்னிஸ்), சுகாஸ் யதிராஜ் (பேட் மிண்டன்), யோகேஷ் கதுனியா (வட்டு எறிதல்), தேவேந்திர ஜஜகாரியா (ஈட்டி ஏறிதல்), சிங்ராஜ் அதானா (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜர் (ஈட்டி எறிதல்), சிங்ராஜ் அதானா, அவனிலெகரா (துப்பாக்கி சுடுதல்), சரத்குமார் (உயரம் தாண்டுதல்), ஹர்விந்தர் சிங் (வில்வித்தை), மனோஜ் சர்க்கார் (பேட்மிண்டன்) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    இந்த நிலையில் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பதக்கம் வென்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    அவர்களும் குருப் போட்டோவும் எடுத்து கொண்டனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களது திறமையை பற்றி பிரதமர் கேட்டறிந்தார். 

    ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி நவம்பர் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் தொடங்குகிறது.
    மெல்போர்ன்:

    ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. நேற்று முன்தினம் புதிய அரசின் விவரம் அறிவிக்கப்பட்டது.

    தலிபான் அரசு பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தலிபான் கலாச்சார கமி‌ஷன் துணைத்தலைவர் வாசிக் கூறும்போது, ‘ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’. அதே நேரத்தில் ஆண்கள் கிரிக்கெட்டில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்றார்.

    இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தலிபான் தடை விதித்தால் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம் என்று ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

    ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி நவம்பர் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் தொடங்குகிறது.

    இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலகளாவிய அளவில் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சியை ஊக்குவிப்பது முக்கியமானது. கிரிக்கெட்டுக்கான எங்கள் பார்வை என்ன வென்றால் இது எல்லோருக்கும் பொதுவான ஒரு விளையாட்டு. நாங்கள் எல்லா மட்டத்திலும் இந்த விளையாட்டை ஆதரிக்கிறோம்.

    மகளிர் கிரிக்கெட்டை ஆதரிக்க முடியாது என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்ததாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதித்தால் ஆப்கானிஸ்தான் உடனான டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம். இதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
    இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனிக்கு 'மென்டார்' பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.  

    இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் டோனியின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் டோனி, மீண்டும் சர்வதேச அரங்கில் முக்கிய பொறுப்பில் செயலாற்ற உள்ளது பலரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.



    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வசிம் ஜாஃபர், 'சிவாஜி' படத்தில் ரஜினி சொல்லும், 'பேர கேட்ட உடனே சும்மா அதிருதில்ல...' என்று வசனத்தின் மீம்-ஐ பகிர்ந்து, 'இந்திய அணிக்கு டோனி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தவுடன் இப்படித்தான் இருக்கிறது' என்றுள்ளார். இது வைரலாகியுள்ளது.
    14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    மான்செஸ்டர்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 151 ரன் வித்தியாசத்திலும், ஓவலில் நடந்த 4-வது டெஸ்டில் 157 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (10-ந் தேதி) தொடங்குகிறது.

    இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் பின் தங்கி இருந்து பெற்ற வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    கடைசி டெஸ்டை டிரா செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இங்கிலாந்து மண்ணில் இதற்கு முன்பு 3 தடவை இந்தியா டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. 1971-ல் அஜித் வடேகர் தலைமையிலான அணி 1-0 (3 டெஸ்ட்) என்ற கணக்கிலும், 1986-ல் கபில்தேவ் தலைமையிலான அணி 2-0 (3) என்ற கணக்கிலும், 2007-ல் ராகுல் டிராவிட் தலைமையில் 1-0 என்ற கணக்கிலும் (3) கைப்பற்றி இருந்தது.

    14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் தற்போது ரகானே மட்டுமே மோசமான நிலையில் உள்ளார். இதனால் அவர் இந்த டெஸ்டில் நீக்கப்படும் நிலையில் உள்ளார். வெற்றி அணி என்பதால் கோலி அதில் மாற்றம் செய்ய மாட்டார் என்ற கருத்து நிலவுகிறது.

    அஸ்வினுக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் அதிகமாக எழுந்து வருகிறது. ஒருவேளை அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ஜடேஜா நீக்கப்படலாம்.

    ரோகித்சர்மா ஒரு சதம், 2 அரை சதத்துடன் 368 ரன்னும், ராகுல் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 315 ரன்னும் எடுத்து உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா 18 விக்கெட்டும், சிராஜ் 14 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்துஅணிக்கு இந்தடெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. டிரா செய்தாலோ, தோற்றாலோ தொடரை இழந்து விடும். இதனால் தொடரை சமன் செய்ய அந்தஅணி வீரர்கள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.

    ஜோரூட் 3 சதம், ஒரு அரை சதத்துடன் 564 ரன்கள் குவித்து உள்ளார். அவர் ஒருவரே அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 131-வது டெஸ்ட் ஆகும். இதுவரை 130 போட்டியில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 49-ல் வெற்றி பெற்று உள்ளன. 50 டெஸ்ட் டிரா ஆனது.

    இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    மான்செஸ்டர்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் இந்திய அணிக்கு 2 உலக கோப்பை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) மற்றும் ஐ.சி.சி. சாம்பியன் டிராபி கோப்பையை (2013) பெற்றுக்கொடுத்து இருக்கிறார்.

    34 வயதான அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகிழ்ச்சியும், நன்றியும் மட்டுமே இப்போது என்னை வரையறுக்கும் இரண்டு வார்த்தைகளாகும்.

    இவ்வாறு அஸ்வின் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

    அவர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார். அஸ்வின் 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தற்போது திகழ்கிறார். அவர் 79 டெஸ்டில் ஆடி 413 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் மரியா ‌ஷகாரி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) - ஆறாம் நிலை வீரரான பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.இதில் ஜோகோவிச் 5-7, 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு கால்இறுதியில் 4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 7-6 (7-8), 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹாரீசை தோற்கடித்தார்.

    அரைஇறுதியில் ஜோகோவிச் - சுவரேவ் மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 17-வது வரிசையில் உள்ள மரியா ‌ஷகாரி (கிரீஸ்) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 4-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை (செக் குடியரசு) அதிர்ச்சிகரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மரியா ‌ஷகாரி

    அவர் அரை இறுதியில் இங்கிலாந்தை சேர்ந்த எம்மா ரடுகானுவை சந்திக்கிறார். ரடுகானு கால் இறுதியில் 6-3, 6-4 என்ற கணக்கில் பெலின்டா பென்சிக்கை (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி கரமாக தோற்கடித்தார்.

    ×