என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. #ElectionCommission #NarendraModi #Amitshah
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் புகார் தெரிவித்தது.

    இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீதான புகார்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசித்தது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமை தாங்கினார்.



    மற்ற தேர்தல் ஆணையர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது கூறியுள்ள புகார்கள் குறித்து எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதே போல் தேர்தல் விதிகளை மீறி ராகுல் காந்தி பல இடங்களில் பேசியதாக பாஜகவினர் அளித்த புகார் தொடர்பாகவும் தலைமை ஆணையர் ஆலோசனை நடத்தினார். #ElectionCommission #NarendraModi #Amitshah
    பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சொகுசு கார்களில் சிவப்பு விளக்குகளை நீக்கி ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம் என பெருமிதமாக கூறியுள்ளார். #PMModi #PublicRally
    முசாபர்பூர்:

    பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23,29  ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பயங்கரவாதத்தினை உருவாக்கும் அனைவரும் இந்த காவலாளிக்கு எதிராக இருக்கிறார்கள். குற்றங்கள் புரிந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று ஜாமீன் கேட்பவர்கள், இந்த உறுதியான அரசினை கண்டு அஞ்சுகின்றனர்.  எதிர்க்கட்சியினர் அவர்களின் வெற்றிக்காக பாடுபடவில்லை, தங்களின் குறைந்த செல்வாக்கை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழிப்புடன் இருங்கள். பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவார்கள், வீட்டை தாண்டினால் பெண்களுக்கு  பாதுகாப்பு இருக்காது.  இருண்ட பின் மக்கள் யாராக இருந்தாலும் வெளியே வர முடியாத சூழல் உருவாகும்.



    ஆனால் எங்கள் ஆட்சியில் சொகுசு கார்களில் இருந்த சிவப்பு விளக்குகளை நீக்கி, ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம். பாஜக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளுக்கு வாக்களித்தாலும், அது இந்த மோடிக்கே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #PublicRally

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சவுரிராஜனும் ஒட்டப்பிடாரம் தொகுதி பார்வையாளர்களாக ஆர்.தங்கவேலு, ஜான்சன் தங்கவேலு, ஜே.எபினேசர், கே.பிரபு ஆகியோரும் திருப்பரங்குன்றம் தொகுதி பார்வையாளர்களாக கே.குருவைய்யா, வி.அண்ணாமலை, வி.ஷாஜி, ஜே.விஜய்பாஸ்கர் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.

    சூலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சினேகனும் தேர்தல் பார்வையாளர்களாக ஆர்.மூகாம்பிகா, சிகே.அருண், ஆர்.சுதாகரன், எம்.பிரபு மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்காக தேர்தல் பொறுப்பாளராக ஏ.சந்திர சேகரனும் தேர்தல் பார்வையாளர்களாக தருமபுரி ராஜசேகரன், ஆர்.ஹரிஹரன், பூவை.ஏ.ஜெகதீஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.’

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam
    திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தன்னிடம் இருப்பதாக கூறி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். #Akhilesh #72yearsban
    லக்னோ:

    மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சேரம்பூர் நகரில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது நாடு முழுவதும் தாமரை மலரும். மம்தாவிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகுவார்கள். இன்றைய நிலவரப்படி அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’ என்று கூறினார்.

    இந்த கருத்துக்கு மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டுமென உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று வலியுறுத்தியுள்ளார்.



    இதுதொடர்பாக லக்னோ நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், ’நாட்டின் முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டிய பிரதமர் 125 கோடி மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்த பின்னர் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருப்பதாக மிரட்டுகிறார்.

    மோடியின் இத்தகைய கருப்புப்பண மனப்பான்மைக்காக தேர்தல் கமிஷன் அவருக்கு 72 மணிநேரம் மட்டுமல்ல; 72 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டார். #Akhilesh #72yearsban 
    தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #ThangaTamilselvan #Panneerselvam

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது. அவர்கள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி அல்ல. மக்கள் வெறுக்கும் அணி.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடையும். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் அவர்கள் கோபத்துடன் பேசி வருகிறார்கள்.

    மதுரையில் பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கோபமாக பேசி இருக்கிறார். இது ஏற்புடையதல்ல. ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.


    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறபோது அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவும்.

    இதனால் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார்.

    தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளன. ஆனால் தோல்வி பயம் காரணமாக தேர்தல் விதிமுறைகளையும் மீறி விட்டு அமைச்சர்களும், அரசு கொறடாவும் சபா நாயகரை சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #Panneerselvam

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை பிரசாரம் செய்கிறார். #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
    கோவை:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

    சூலூர் தொகுதியில் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை(1-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். திறந்தவேனில் நின்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் கோவை வருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மீண்டும் வருகிற 14-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் 2-வது கட்டமாக பிரசாரம் செய்கிறார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5, 6-ந்தேதிகளில் சூலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.

    சூலூர் தொகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சூலூர் பகுதியில் தேர்தல் களைகட்டியுள்ளது. #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
    ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார். #TNAssemblyElection #MKStalin
    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று (29-ந்தேதி) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் மோகன், தி.மு.க. வேட்பாளர் சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா மற்றும் சுயேட்சைகள் உள்பட 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தவரை 5 முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே இருப்பதால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை நாளை (1-ந்தேதி) தொடங்குகிறார். தனது கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து அவர் தொகுதி முழுவதும் திறந்த வேனில் சென்று மக்களை நேரடியாக சந்தித்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.



    பின்பு அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நாளை (1-ந்தேதி) காலை பேரணி மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடக்கிறது. பேரணி தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் தொடங்கி வி.வி.டி. சிக்னல் வழியாக சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்து சேருகிறது.

    இந்த பேரணியில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். பின்பு நடக்கும் நினைவேந்தல் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    பின்னர் நாளை மாலை ஓட்டப்பிடாரம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் திறந்த வேனில் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க சந்திப்பில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு மாப்பிள்ளையூரணியிலும், இரவு 7 மணிக்கு தருவைகுளத்திலும், 7.30 மணிக்கு புதியம்புத்தூரிலும், 8 மணிக்கு ஓட்டப்பிடாரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

    மறுநாள் (2-ந்தேதி) காலை 8.30 மணிக்கு ஸ்பிக்நகர் குடியிருப்போர் நலச்சங்க சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளிலும், இரவு 7.30 மணிக்கு முடிவைத் தானேந்தல் கிராமத்திலும் பிரசாரம் செய்கிறார்.

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்வதால் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளதால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. #TNAssemblyElection #MKStalin

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம்.



    அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்யும்.

    தற்போது அந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்கிறார். அவரிடம் இருந்து அறிக்கை பெறப்படும். அலுவலர்கள் செய்த தவறு வரிசையாக பட்டியலிடப்படும். அதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலரின் பதில் பெறப்படும்.

    அதற்கான விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறையையும் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த பிரச்சினையில் காலதாமதம் ஏற்படும்.

    விசாரணை அதிகாரி அந்த நடிகர்களை சாட்சியாக விசாரிக்க முடியும். அலுவலர்கள் சொல்வது சரியா என்பதை நடிகர்கள் கூறும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். முதலில் குற்றப்பதிவு செய்யப்படும். இரண்டாவதாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். மூன்றாவதாக, விசாரணை அதிகாரியின் அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் தகுந்த தண்டனையை விதிப்பார். அந்தத் தண்டனையை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். இதுதான் நடைமுறை.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் இன்று 4-ம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #LSElections2019 #VoterTurnout
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நான்காவது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது வாக்கை பதிவு செய்தார்.

    மாலை 6 மணிக்கு 72 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சரியாக 6 மணிக்குள் வாக்குச்வாடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்தியா முழுவதும் நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவு ஆனதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #LSElections2019 #VoterTurnout
    ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற வாக்குப்பதிவின்போது இருதய நோய் மருத்துவர் 80 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார். #Jaipurcardiologist #parliamentelection
    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிஎல் சர்மா என்ற இருதய நோய் மருத்துவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் டோங்க் மாவட்டத்தில் உள்ள சோடா கிராமம் ஆகும். இங்குதான் இவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் இருந்து மருத்துவமனை 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

    சோடா கிராமம் சவாய்மாதோபுர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடிவு செய்தார். மேலும், மக்களுக்கு ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் எண்ணினார்.

    இதனால் ஜெய்ப்பூரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சைக்கிளிலேயே பயணம் செய்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

    இதுகுறித்து சர்மா கூறுகையில் ‘‘வாக்குப்பதிவு மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றின் விழிப்புணர்வுக்காகத்தான் இதை செய்தேன். என்னுடைய கிராமத்தை அடைய நான்கு மணி நேரம் ஆனது. நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சைக்கிள் ஓட்டுகிறேன். சைக்கிள் ஓட்டுவது இருதயத்திற்கு நல்லது’’ என்றார்.

    ராஜஸ்தானில் இன்று 13 மக்களை தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. #Jaipurcardiologist #parliamentelection
    பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். #Varanasipolls #TejBahadurYadav #Samajwadi
    லக்னோ:

    பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
     
     ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான். எனவே, வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இங்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல்  முடிவடைகிறது.

    இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.#Varanasipolls #TejBahadurYadav #Samajwadi
    தமிழகத்தில் இன்னும் 3 வாரத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. ஸ்டாலின் முதல்வராக அமர்வார் என்று துரைமுருகன் பேசியுள்ளார். #duraimurugan #mkstalin #dmk #edappadipalanisamy
    கோவை:

    சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் சூலூரில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வுக்கு நிகரான கட்சி இந்தியாவில் எங்கும் இல்லை. எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை ஆட்டி பார்க்க முடியவில்லை. பண பலம், போலீஸ் பலம் என அனைத்தும் வைத்துள்ள அ.தி.மு.க.வினர் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடிந்ததா?.

    மத்திய, மாநில ஆட்சிகளை ஒரே நேரத்தில் தூக்கி எறியும் சக்தியை கலைஞர் பெற்றிருந்தார். இப்போது தலைவர் இல்லாத நேரத்தில் யார் பிரதமர் என்பதை சொல்லும் சக்தியை தளபதி பிடித்துள்ளார். தளபதியின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக பார்க்கிறேன். கண்ணை மூடினால் கலைஞராக தோன்றுகிறார்.

    கலைஞரிடத்தில் கற்ற வரம் தமிழகத்தில் தளபதிக்கு கிடைத்துள்ளது. தளபதி 50 ஆண்டுகள் ஆட்சி புரிவார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 37 எம்.பி. தொகுதிகள் தளபதியின் கையில் வந்து விடும். ஒன்று அல்லது இரண்டில் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 5 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தான் ஆட்சி கிடைக்கும் என்பதால் தான் மீண்டும் 3 எம்.எல்.ஏ.க்களை களை எடுக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சூலூரில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என கோடிகளை இறக்கி உள்ளனர். கோவை மக்கள் பணத்திற்கு மோசம் போக மாட்டார்கள். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி 100 சதவீதம் வெற்றி பெறுகிறோம். சூலூரையும் ஜெயித்து காட்டுங்கள். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று கூறினார் எடப்பாடி. உலகத்தில் மோடியை போல் வெறுப்பை பெற்ற பிரதமர் யாருமே கிடையாது. மீண்டும் பிரதமராக வர மோடிக்கு வாய்ப்பே இல்லை. 

    தமிழகத்தில் இன்னும் 3 வாரத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. ஸ்டாலின் முதல்வராக அமர்வார். ராகுல் பிரதமராக அமர்வார். 

    இவ்வாறு அவர் பேசினார். #duraimurugan #mkstalin #dmk #edappadipalanisamy
    ×