search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி, அமித்ஷா மீது புகார்- தேர்தல் ஆணையம் ஆலோசனை
    X

    மோடி, அமித்ஷா மீது புகார்- தேர்தல் ஆணையம் ஆலோசனை

    பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. #ElectionCommission #NarendraModi #Amitshah
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் புகார் தெரிவித்தது.

    இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீதான புகார்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசித்தது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமை தாங்கினார்.



    மற்ற தேர்தல் ஆணையர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது கூறியுள்ள புகார்கள் குறித்து எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதே போல் தேர்தல் விதிகளை மீறி ராகுல் காந்தி பல இடங்களில் பேசியதாக பாஜகவினர் அளித்த புகார் தொடர்பாகவும் தலைமை ஆணையர் ஆலோசனை நடத்தினார். #ElectionCommission #NarendraModi #Amitshah
    Next Story
    ×