என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கபடி போட்டியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
    • இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் தொடங்கியது. ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மின்னொளி விளையாட்டு அரங்கில் நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்ட தலைவர் கபடி சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். கோவில்பட்டி தொழில் பிரமுகர் வெங்கடசுப்பிரமணிய ராஜா, கவுன்சிலர் சோலைமலை, அரிமா சங்கம் சார்பில் ராம் சிங் மற்றும் சிவக்குமார், முத்துராமலிங்க பாண்டியன், விளையாட்டு மன்ற செயலாளர் கனி முத்து குமரன் உள்பட பலர் பேசினர்.

    விளையாட்டு மன்ற பொருளாளர் சம்சுதீன் வரவேற்றார். முன்னணி விளையாட்டு வீரர் காளிதாஸ் தொகுத்து வழங்கினார். முதலாவது போட்டியாக முகவூர் நண்பர்கள் அணியும், வத்திராயிருப்பு அணியும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது. 

    • சிறுமியிடம் சில்மிசம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • முதியவரை ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி. இவர் அதிகாலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியாண்டவர் (வயது74) சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயற்சித்தார். அப்போது சிறுமி கூச்சலிட்டார். அதைகேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    அவர்கள் முதியவரை பிடித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் வழக்குப்பதிவு செய்து முதியவரை போக்சோவில் கைது செய்தார்.

    • வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சீனியம்மான் (வயது32). இவர் குழந்தைகள் வீட்டில் இருந்ததால் வீட்டை திறந்து வைத்து விட்டு பக்கத்து ஊருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    திரும்பி வந்து பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்து 5பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது45). இவரது வீட்டில் புதிதாக ஏ.சி.பொருத்தியுள்ளனர். அந்த பணியை முடித்து பின் பார்த்த போது 1 1/2 மோதிரம் காணாமல் போயியுள்ளது.

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் சீனிவாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே கீழராஜகுல ராமன் பகுதியில் அச்சம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி சங்கர நாராயணன் வந்தார்.

    அப்போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி நவநீத கிருஷ்ணன் கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
    • அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சாத்தார்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவிலா கும். இங்கு ஆண்டு முழு வதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், போன்ற 16 வகையான சிறப்பு அபிஷே கம் நடந்தது. கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கோவிலில் நேர்த்திகடன் செலுத்தி அம்மனுக்கு தீச்சட்டி, அங்க பிரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டி, மாவிளக்கு போன்ற நேர்த்திக்கடனை செலுத்தினர்,

    தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில் பட்டி போன்ற பல ஊர்க ளில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் தொட்டி, மருத்துவ வசதி, ஆகிய வற்றை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பி னர்கள், கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.

    • இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
    • அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி புல்லா நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கிருஷ்ணன் என்பவரது மகன் பெருமாள் (வயது 28), சின்னகிருஷ்ணன் என்பவரின் மகன் விஜய்(27).

    உறவினர்களான இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று ஆடுகளை மேய்ப்பதற்காக ராணி சேதுபுரம் என்ற இடத்திற்கு சென்றனர். வழக்கமாக இருவரும் மாலையில் ஆடுகளுடன் வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள்.

    ஆனால் இருவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இவர்களது உறவினர்கள், இருவரையும் நேற்று இரவு தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு 2 பேரும் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக பரளச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நேற்று மாலை அந்த பகுதியில் கடும் இடி-மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. இதனால் பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட 2 வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி புல்லாநாயக்கன்பட்டி கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    • தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது38). இவருக்கு மகேஷ் என்ற மனைவியும், இன்பராஜ், அழகுராஜா என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    மாரியப்பன் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவும் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தார்.

    மாரியப்பன் வேலை பார்க்கக்கூடிய மாந்தோப்புக்கு அருகில் மற்றொரு நபரின் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக, தோட்டத்தின் உரிமையாளர் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது.

    இதனை அறியாத மாரியப்பன், அந்த தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மாரியப்பன் தெரியாமல் மிதித்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மின்வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை இன்று காலை தோட்டத்துக்கு சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதையடுத்து அவரது உடலை போலீசார் அங்கிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் இறந்து கிடந்த தோட்டத்தில் உரிமையாளர் அனுமதி பெற்று மின்வேலி அமைத்திருந்தாரா அல்லது அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக அமைத்து உள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே நேரத்தில் மாரியப்பன், தான் வேலை பார்த்த தோட்டத்திலிருந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு இரவு நேரத்தில் சென்றது ஏன்? என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல், முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசி அருகே ஊராம்பட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

    ஆனால் இது போதாது. ரூ.500-க்கும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பட்டாசு தொழிலாளர்கள் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பம் போதிய வருமானம் இன்றி தவிக்கும். எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

    சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியதைபோல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறக்கும் தொழிலாளர்களுக்கும் இனி வரும் காலங்களில் அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மின்பகிர்மான மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் ஆகிய தொழிற் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்ப்ளாயிஸ் பெடரேசன் மாநில இணை செயலாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் திட்ட செயலாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், பெடரேசன் மாநில உப தலைவர் திட்டச் செயலாளர் ஞானகுரு, இளங்கோவன் ஆகியோர் பேசினர்.

    கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 1.12.2019க்குப் பின் பணியில் சேர்ந்த 9,500 கேங்மேன் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணப்ப லன்கள் வழங்காதது, 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியி டங்களை நிரப்புவதற்கு உத்தரவாதம் தரப்படாதது, ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு தினமும் ரூ.480 ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்க படாதது ஆகியவற்றை கண்டித்தும், துப்புரவு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • ராஜபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி இன்று மாலை தொடங்குகிறது.
    • நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் இன்று (20-ந் தேதி) மாலை முதல் தொடங்குகிறது.

    ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மாலை 4 மணியளவில் கபடி போட்டிகள் தொடங்குகின்றன.

    நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார். ராஜுக்கள் கல்லூரி செயலாளர் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு கபடி போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.

    கே.எஸ்.ஆர். பஸ் சர்வீஸ் அதிபர் பிரகாஷ் சங்கர், அர்ஜுனா விருது பெற்ற வீரர் கணேசன், கலால்துறை கண்காணிப்பாளர் கனிமுத்து குமரன், மதுரை வல்லத்தரசு ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனிமுத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இந்த போட்டிகளை காவல்துறை அணி உள்பட 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    • நூலக புரவலருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • தன்னார்வலர் முனியசாமி கண்ணன் புரவலராக இணைந்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. நிர்வாகியான புரவலர் ஆசிரியர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார்.

    ஆசிரியர்கள் ராமையா,பெருமாள் முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்க ளையும் வழங்கி, புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர்.

    மேலும் இந்த விழாவில் நூலக தன்னார்வலர் முனியசாமி கண்ணன் ரூ. 21 ஆயிரம் செலுத்தி 92-வது புரவலராக இணைந்தார். அவருக்கு நூலகத்துறை சார்பிலும், வாசகர் வட்டத்தின் சார்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நூலகர் முத்து நன்றி கூறினார்.

    • ரஷியா-உக்ரைன் போர் காரணமாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • நுாற்பாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன.

    ராஜபாளையம்

    தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள், பேண்டேஜ் மருத்துவ துணி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது அதன்படி திருப்பூரில் இருந்து பின்னலாடைகள், ராஜபாளையத்தில் இருந்து பஞ்சு நூல் மற்றும் ராஜ பாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சம்சிகாபுரம் பகுதிகளில் இருந்து பாண்டேஜ் மருத்துவ துணி போன்ற பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஆனால் தற்போது தயாரிக்கப்பட்ட சரக்குகள், கிடங்குகளில் இருந்து எடுக்கப்படாமல் இருப்பு வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அந்த நாட்டு மக்கள் சிக்கன நடவடிக்கையில் உள்ளனர். அதாவது ஆடம்பர செலவுகளை குறைத்து, எரிபொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டும் செலவிடுகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கணிசமாக அளவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

    நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,680 கோடியாக குறைந்துள்ளது. 2022 ஏப்ரலில் ரூ.8,831 கோடியாக இருந்த பருத்தி நுால், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதி, நடப்பாண்டில், ரூ. 7 ஆயிரத்து 282 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.

    இதேபோல் செயற்கை நுாலிழை 'பேப்ரிக்' மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ. 3 ஆயிரத்து 477 கோடியாக இருந்தது. இந்தாண்டில், ரூ.3ஆயிரத்து 223 கோடிக்கு மட்டும் ஏற்றுமதி நடந்துள்ளது

    இதேபோல் சணல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.348 கோடியாக இருந்த நிலையில் தற்போது, ரூ.274 கோடியாக குறைந்துள்ளது. 'கார்பெட்' ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ.952 கோடியாக இருந்து, ரூ. 862 கோடியாக குறைந்துள்ளது.

    கைத்தறி ஜவுளி மற்றும் கைத்தறிகளில் உற்பத்தி யாகும் கார்பெட் ஏற்றுமதி ரூ.1,182 கோடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் ரூ.989 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு, அனைத்து வகை கட்டமைப்புகளுடன் சீரான பஞ்சு-நுால் விலையுடன் தயார்நிலையில் இருந்தும், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டு ள்ளது. நுாற்பாலைகளும், உற்பத்தியை குறைத்து உள்ளன.

    ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல், இயல்புநிலை திரும்பாது. போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் சீராக வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.

    இதேபோல் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இருவேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பல்வேறு நாடுகளை பாதிக்கிறது. எனவே அனைத்து தரப்பி னரும் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுமதி தொழில்து றையினரின் அதிகபட்ச எதிர்பார்ப்பு ஆகும்.

    • ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ராக்காச்சி அம்மன் கோவில்.இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.

    குறிப்பாக பாலாறு, பல்லாறு என்று அழைக்கப்படும் பகுதியில் சுமார் 32 விவசாயிகளின் 82 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் ஓடை மற்றும் ஓடை கரை அமைந்துள்ளது. இந்த இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்த தாக விவசாயிகள் 32 பேரும் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் புகார் செய்தனர்.

    குறிப்பாக 15 விவசாயிகள் மனுவாக கொடுத்து கோர்ட்டையும் நாடினர். இதன் அடிப்படையில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன். மண்டல துணை வட்டாட்சியர் ஆண்டாள். ஆர்.ஐ.தங்க புஷ்பம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசா யிகளின் பயன்பாட்டுக்குரிய ஓடை மற்றும் பாதையை ஜே.சி.பி. எந்திரம் உதவி யுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். 

    ×