என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • டிரைவர்-கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது42). மேலகண்ட மங்கலத்தில் உள்ள மில்லில் டிரைவராக வேலை பார்த்தார். இவரது மனைவி கவிதா (37).

    ராஜேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை கவிதா கண்டித்தார். இதில் மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த மின்விசிறி யில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடை உரிமையாளர்

    சிவகாசி தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாந்தினி ரத்தினா (27). இவர்கள் 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை.

    இந்த நிலையில் கடைக்கு வந்த பெண்ணிடம் மணி கண்டன் பேசிக் கொண்டி ருப்பதை பார்த்து மனைவி கண்டித்தார். இதையடுத்து இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வாங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டிட பணிக்கு சென்ற புளியங்குளம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஹரிஷ்குமார், 12 வகுப்பு மாணவர் ரவிச்செல்வம் ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, நாலூர் பூமிநாதன், தோப்பூர் முருகன்,யோக வாசுதேவன், சண்முகக்கனி மற்றும் பனைக்குடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாவட்டத்திற்கு தலைவராக வீரசோழனை சேர்்ந்த சவரிமுத்து, துணைத்தலைவராக கீழஉப்பிலிக்குண்டு ராமர், அமைப்பாளராக கல்குறிச்சி கடம்பவனம் துணை அமைப்பாளர்களாக பூலாங்கால் மைதின் அப்துல்காதர், குலசேகரநல்லூர் முத்துராமலிங்கம், சிவகாசி அன்பு முருகன், பொட்டகாசியேந்தல் பிச்சைமணி, மல்லாங்கிணறு ரங்கசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்டத்திற்கு தலைவராக சுந்தரபாண்டியம் பகுதிைய சேர்ந்த சடையாண்டி, துணைத்தலைவராக சமுத்திராபுரம் ஆனந்தா முருகன், அமைப்பாளராக அருப்புக்கோட்டை திருநகரம் அண்ணாதுரை, துணை அமைப்பாளர்களாக சங்கரபாண்டியாபுரம் பாலசுப்பிர மணியன், குருநமசிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பஸ்நிலையம் அருகே தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெய பெருமாள், முனியாண்டி, முத்துராமலிங்கம், சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கலாவதி சந்திரன், பனைக்குடி கூட்டுறவு சங்கதலைவர் ராஜா, பட்டமங்களம் கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன், வரிசையூர் வீர மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் பேசுகை யில், நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டிடப்பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவா ரணம் வழங்க வேண்டும்.

    நரிக்குடி அருகே உள்ள உண்டுறுமி கிடாக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக்கழிவுகள் எரியூட்டும் நிலையத்தை நிரந்தரமாக தடை செய்து மூட வேண்டும் என்றார்.

    • சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ராஜேஸ்வரிக்கும், சங்கர நத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (50) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பரமசிவத்துடன் பேசுவதை ராஜேஸ்வரி தவிர்த்துள்ளார். மேலும் தன்னுடன் பழகுவதை கைவிடுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

    சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்று இரவு ராஜேஸ்வரி வீட்டின் திண்ணையில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த பரமசிவம் தூங்கியிருந்த ராஜேஸ்வரியின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார்.

    இன்று அதிகாலை ஊர் திரும்பிய முத்துப்பாண்டி வீட்டின் திண்ணையில் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

    • சிவகாசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
    • தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் ராம்கோ கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான ராம்கோ டிராபி 2023- 24-ம் ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகள் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் மைதா னத்தில் ராம்கோ கிரிக்கெட் கிளப் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. ராம்கோ கிரிக்கெட் கிளப் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 32 அணிகளும், 480-க்கும் மேற்ப்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.

    முதல் மற்றும் 2-ம் பரிசுக்கான போட்டி நேற்று மாலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த சிவகாசி ஸ்டார்ஸ் அணியும், விருதுநகரைச் சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிவகாசி ஸ்டார்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விருதுநகரை சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சிவகாசி ஸ்டார் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் பரிசையும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் பெற்றது.

    போட்டியில் சிவகாசி ஸ்டார் அணி முதல் பரிசையும், விருதுநகர் அக்குவா கிங்ஸ் அணி 2-ம் பரிசையும், ராஜபாளையம் ராம்கோ குரூப் அணி 3-ம் பரிசையும் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராம்கோ நூற்பாலை பிரிவுகளின் தலைவர் மோகனரங்கன், முன்னாள் கூட்டுறவு வங்கியின் மேலாளரும், ராஜபாளையம் தி.மு.க. தெற்கு நகர செயலாளருமான பேங்க்ரா மமூர்த்தி, சரஸ்வதி அகாடமி நிறுவனர் மணிகண்டன், 36-வது வார்டு கவுன்சிலர் குணாகோபிநாத், 37-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    • கபடி அணிகளுக்கு பரிசுகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் ஊராட்சி செவன் லயன்ஸ் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியையும், ராஜ பாளையம் ஆவாரம்பட்டி யாழினி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கபடி போட்டியை யும் எம்.எல்.ஏ. தங்கப் பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுத் துறைக்கு புத்துயிர் கொடுத்து அதனை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில் நமது முதலமைச்சரும், விளை யாட்டுத்துறை அமைச்சரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பொன்னுத்தாய், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளி திடீரென இறந்தார்.
    • முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள அச்சம் தவிர்த்தான் கீழத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி(வயது28). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவி மாயமானார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகேயுள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்த 17 வயதுடைய பெண் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் அரசு இறுதித்தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த மாணவி சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் கணேஷ்கு மார்(33). கடந்த சில மாதங்களாக இவருக்கும், இவரது மனை விக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த கணேஷ்குமார் திடீரென மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் மீது தாக்குதல் நடந்தது.
    • 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் அருணாசலம்(வயது23). இவருக்கும் தேராபட்டியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் சம்பவத்தன்று அருணாச்ச லத்தை தனியாக அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி தேராபட்டியை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணசாமி, அருண், ஆனந்த், வல்லரசு, தீபா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதி கொண்டனர்.
    • 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    வெம்பக்கோட்டை ஆலங்குளத்தை அடுத்துள்ள உப்புப்பட்டியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, அவரது கணவர் மருதுபாண்டி ஆகியோர் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த அஜய், குமரகுரு, விக்னேஸ்வரன் உள்பட 5 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் மகாலட்சுமி, மருதுபாண்டி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மருதுபாண்டி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • கருந்திரிகள்-பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஜோதிபுரத்தை சேர்ந்த சதுரகிரி(வயது63), சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன்(59), நல்லையன்(59) ஆகியோர் அனுமதியின்றி கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 115 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி உசேன் காலனியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் அழகாபுரி ரோட்டில் அனுமதியின்றி தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்துள்ளார். இது தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×