என் மலர்
நீங்கள் தேடியது "Bilateral"
- இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.
- 6 பேர் காயமடைந்தனர் மற்றும் 28 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பிசிண்டி கிராமத்தில் நேற்று குறிப்பிட்ட சமுதாயத்தின் ஊர் கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதலாக வெடித்தது.
இருதரப்பை சேர்ந்தவர்க ளும் ஒருவரை யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் அந்த ஊரைச்சேர்ந்த காமராஜ் மனைவி ஜெயக்கொடி, அவரது மகன் சிவா மற்றும் ராஜா(வயது41), மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராஜ சுலோக்சனா உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் காரியாபட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ரகுபதி, ராஜ்குமார், செல்வராஜ், ராமச்சந்திரன், பாலமுருகன், எம்.ஜி.ஆர். என்ற சீனி வாசன் உள்பட 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இரு தரப்பினர் மோதலால் பிசிண்டி கிரா மத்தில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் அந்தப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்ட னர்.
- கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதி கொண்டனர்.
- 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
வெம்பக்கோட்டை ஆலங்குளத்தை அடுத்துள்ள உப்புப்பட்டியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, அவரது கணவர் மருதுபாண்டி ஆகியோர் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த அஜய், குமரகுரு, விக்னேஸ்வரன் உள்பட 5 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மகாலட்சுமி, மருதுபாண்டி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மருதுபாண்டி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- முதல் கட்டமாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.
- நைஜீரிய பயணத்தை முடித்துக்கொண்டு அவர் பிரேசில் சென்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.
முதல் கட்டமாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் சென்ற அவர், அங்கு நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து கயானா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய தேசிய விருதான, தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ் விருது வழங்கப்பட்டது.
இந்தச் சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ஜி20 மாநாட்டை முன்னிட்டு பிரேசிலில் நடைபெற்ற 10 இருதரப்பு பேச்சுவார்த்தைகள், தொடர்ந்து கயானாவில் நடைபெற்ற 9 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றில் மோடி பங்கேற்றார்.
பிரேசிலில் இந்தோனேசியா, போர்ச்சுக்கல், இத்தாலி, நார்வே, பிரான்ஸ், இங்கிலாந்து, சிலி, அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
கயானாவில் டொமினிகா, பகாமாஸ், டிரினிடாட்&டுபாகோ, சுரிநாம், பார்படாஸ், ஆன்டிகுவா-பார்படா, கிரெனெடா மற்றும் செயிண்ட் லூசியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதவிர, முறைசாரா சந்திப்புகள் வாயிலாக சிங்கப்பூர், தென் கொரியா, எகிப்து, அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றியம், உலக வர்த்தக மையம், உலக சுகாதார மையம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.






