கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதி கொண்டனர். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்
Published on

விருதுநகர்

வெம்பக்கோட்டை ஆலங்குளத்தை அடுத்துள்ள உப்புப்பட்டியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, அவரது கணவர் மருதுபாண்டி ஆகியோர் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த அஜய், குமரகுரு, விக்னேஸ்வரன் உள்பட 5 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மகாலட்சுமி, மருதுபாண்டி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மருதுபாண்டி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com