என் மலர்
விழுப்புரம்
- உடன் சென்ற நண்பரும் உயிரிழப்பு
- கார்த்திக்ராஜா மணிகண்டன் அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார்.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கலை சேர்ந்தவர் குமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 28). தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிக்கு பண்ருட்டியில் நேற்று குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கார்த்திக்ராஜா அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24) என்ற நண்பரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார். குழந்தையை பார்த்து விட்டு இன்று பகல் 11 மணியளவில் பண்ருட்டியில் இருந்து பரிக்கலுக்கு புறப்பட்டனர். அப்போது திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள அரசூர் பாலம் அருகே காலை 11.30 மணிக்கு வந்த போது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகியோர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
தகவல் அறிந்த திருவெண்ணை நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தந்தை, அவரது நண்பர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் பரிக்கல் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- செயற்பொறியாளர் எம்.சிவகுரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
விழுப்புரம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெட்டிக்குளம், வெள்ளாழங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தும் விழுப்புரம் கலெக்டர்.
விழுப்புரம்:
மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கபடாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், முதற்கட்டமாக விழுப்புரம் நகராட்சியில் 16 அரசுப்ப ள்ளிகளில் 1,902 பேருக்கும், திண்டிவனம் நகராட்சியில் 6 அரசுப்பள்ளிகளில் 261 பேருக்கும் என மொத்தம் 22 அரசுப்பள்ளிகளில் 2,163 மாணவ, மாணவியர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்பட்டது. இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 2-ம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் பொன்முடி, செஞ்சியில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரால் துவக்கி வைக்க ப்பட்டது. அன்றிலிருந்து, மாணவ, மாணவியர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகராட்சியில் 1 அரசுப்பள்ளியில் 293 பேருக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 5 அரசுப்பள்ளி களில் 215 பேருக்கும், செஞ்சி பேரூராட்சியில் 5 அரசுப்பள்ளிகளில் 442 பேருக்கும், அனந்தபுரம் பேரூராட்சியில் 4 அரசுப்பள்ளி களில் 276 பேருக்கும், மரக்காணம் பேரூராட்சியில் 11 அரசு ப்பள்ளிகளில் 719 பேருக்கும், வளவனூர் பேரூராட்சியில் 4 அரசுப்ப ள்ளிகளில் 295 பேருக்கும், விக்கிரவாண்டி பேரூராட்சி யில் 3 அரசுப்பள்ளிகளில் 314 பேரு க்கும், அரகண்ட நல்லூர் பேரூராட்சியில் 3 அரசுப்பள்ளிகளில் 91 பேருக்கும், திருவெண்ணெ ய்நல்லூர் பேரூராட்சியில் 2 அரசுப்பள்ளிகளில் 249 பேருக்கும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 அரசுப்பள்ளிகளில் 3,956 பேருக்கும், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 69 அரசுப்பள்ளி களில் 3,628 பேருக்கும், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் 82 அரசுப்பள்ளிகளில் 2,756 பேருக்கும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 60 அரசுப்பள்ளி களில் 2,517 பேருக்கும், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசுப்பள்ளிகளில் 3,405 பேருக்கும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 86 அரசுப்பள்ளிகளில் 4,517 பேருக்கும், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 88 அரசுப்பள்ளி களில் 3,967 பேருக்கும், காணை ஊராட்சி ஒன்றியத்தில் 75 அரசுப்பள்ளிகளில் 5,180 பேருக்கும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அரசுப்பள்ளிகளில் 4,025 பேருக்கும், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 78 அரசு ப்பள்ளிகளில் 4,363 பேருக்கும், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 83 அரசுப்பள்ளிகளில் 3,394 பேருக்கும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசுப்பள்ளி களில் 5,116 பேரு க்கும், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 72 அரசுப்பள்ளிகளில் 6,101 பேருக்கும் என மொத்தம் 1,026 அரசு ப்பள்ளிகளில் 55,819 மாணவ, மாணவி யர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 22 அரசுப்ப ள்ளிகளில் 2,163 மாணவ, மாணவி யர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 1,026 அரசுப்பள்ளி களில் 55,819 மாணவ, மாணவியர்கள் என 1,048 அரசு ப்பள்ளி களில் பயிலும் 57,912 மாணவ, மாணவிய ர்களுக்கு முதல் -அமை ச்சரின் காலை உணவு திட்ட த்தின்கீழ், காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு
- உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை முகப்பு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள், பங்க் கடைகள், டீக்கடைகள் உள்ளன. இங்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், கதிரவன், ஸ்டாலின், ராஜரத்தினம், அன்பு பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் முண்டியம்பாக்கத்தில் ஓட்டல்கள், பங்க் கடை, டீக்கடை ஆகிய வற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஓட்டல்களில் சுகாதார மற்ற முறையில், காலாவதியான உணவு பண்டங்களையும், பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்த கூடாத உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 5 ஓட்டல்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றாததால் அந்த ஓட்டல்களுக்கு மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அறிவுறு த்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தொட ரும் என ஓட்டல் உரிமையா ளர்களுக்கு எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது ஓட்டல்களில் கெட்டுப்போன வெஜ் பிரியாணி, பால் பாக்கெட், கீரிம் கேக், குளிர் பானங்கள், தேதி குறிப்பிடா மலும், காலாவதியான பிஸ்கட், உணவு பண்டங்கள் சுமார் 150 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அனைத்தையும் கீழே கொட்டி அழித்தனர்.
- 11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- கடந்த 22-ந்தேதி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடி ஆஜரானார்.
விழுப்புரம்:
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத்துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான பொன்.கவுதமசிகாமணி, குமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 போ் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 22-ந்தேதி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடி ஆஜரானார். பொன்.கவுதமசிகாமணி ஆஜராகவில்லை. பொன்.கவுதமசிகாமணி எம்.பி மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
- விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ளவைகளை சரிபார்த் தார்.
- விக்கிர வாண்டி தாலுகா முண்டி யம்பாக்கம், பாப்பனப்பட்டு ஊராட்சியில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தாலுகா வில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். விக்கிர வாண்டி தாலுகா முண்டி யம்பாக்கம், பாப்பனப்பட்டு ஊராட்சியில் நேற்று விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு செய்தார். இதில் கலை ஞர் மகளிர் உரிமை திட்ட த்தின் கீழ் ரூ. 1000 பெற விண்ணப்பத்தவர்க ளின் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ள வங்கி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண் உள்ளிட்டவை களை கலெக்டர் சரிபார்த் தார். ஆய்வின் போது தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், வருவாய் ஆய்வா ளர்கள் தெய்வீகன், ராஜேஷ், வி.ஏ.ஓ. க்கள் அபி ராமி, விண்ணரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- அசைவ ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.
- உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில், இன்று சிலர் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட னர். அதில், பழைய கோழி இறைச்சி இருந்ததை கண்டு, உணவு பாதுகாப்புதுறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்த னர். தகவலறிந்த, உணவு பாது காப்பு துறை அதிகாரிகள், திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு மாவட்ட நிய மன அலுவலர் டாக்டர். சுகந்ததன் தலைமை யில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், 10 கிலோ நிற மேற்றப்பட்ட கோழி இறைச்சி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, அதை பறி முதல் செய்து அழித்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்ட கடைகளில் சோத னை நடத்தினார். சோதனை யில் பரோட்டா டிசைன் 32 கிலோ மற்றும் கார்பெண்ட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழ தார்கள் 150 கிலோ மற்றும் ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் 90 லிட்டர் போன்றவை கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது. மேலும் 4 கடைகளுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப் பட்டது. இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடை பெறும் என உணவு பாது காப்புத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.
- காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர்.
- சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குடுமியான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தொழிலாளி இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் மகள் ஜெயலட்சுமி (வயது 22) பி.எஸ்.சி பட்டதாரி. நேற்று காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் செரலாபட்டிற்கு சென்றார்.
- மேல்சிகிச்சைக்கு புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரலாபட்டு பகுதியை சேர்ந்தவர் பாவாடை (வயது 50). தொழிலாளி இவர் கடந்த 28-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் செரலாபட்டிற்கு சென்றார். அப்போது சென்னை-திருச்சி சாலை இருவேல்பட்டு அருகே வழியாக மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த தனியார் வாகனம் மோதி பலத்த படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பாவாடையை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பாவாடை உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோஷம் நீக்க பரிகாரங்கள் செய்வது வழக்கம்.
- தனக்கு திருமணம் ஆவதற்கு பரிகார பூஜை செய்ய கேட்டுக் கொண்டார்.
விழுப்புரம்:
திருவண்ணாமலை மாவட்டம் அடராப்பட்டில் குறி சொல்லும் மையம் நடத்தி வந்தவர் சரவணன் (வயது 42 )சாமியார். தாடியும் நீண்ட தலைமுடியும் வைத்திருப்பவர். இவர் தோஷம் நீக்க பரிகாரங்கள் செய்வது வழக்கம். இந்நிலையில் செஞ்சியை அடுத்த ஒதியத்தூரை சேர்ந்த பச்சையப்பன் மகன் திருமலை (வயது 35) சாமியார் சரவணனை அணுகி தனக்கு திருமணம் ஆவதற்கு பரிகார பூஜை செய்ய கேட்டுக் கொண்டார்.அதற்கு ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொண்டு செஞ்சியை அடுத்த பெருங்கப்பூர் ஏரி பகுதியில் உள்ள காளி கோவிலில் சாமியார் பரிகார பூஜைகள் செய்துள்ளார். ஆனால் பரிகார பூஜைகள் செய்து நீண்ட நாட்களாகியும் திருமண த்தடை நீங்காததால் விரக்தி அடைந்த திருமலை கடந்த 27-ந்தேதி மீண்டும் சாமி யாரை பூஜை செய்வதற்கு வரச் சொல்லி உள்ளார்.
பணம் வாங்கிக் கொண்டு திருமண தடை நீங்காததால் விரக்தி அடைந்த திருமலை சாமியாரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது .அப்போது ஆத்திரமடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமியார் சரவணன் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் குடல் சரிந்த நிலையில் தனியாக விழுந்து கிடந்த சாமியாரை மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இது குறித்து சாமியார் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். திரும லையை தனிப்படையினர் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பதுங்கி இருந்த திருமலையை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணா இன்று விழுப்புரம் வந்தார்.
- சிறு வயது முதலே ரஜினிகாந்த் யோகியின் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று தான் என்றார்.
விழுப்புரம்:
பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என அவரது அண்ணன் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா இன்று விழுப்புரம் வந்தார். விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணாமலை சைவ ஓட்டலை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் விழுப்புரத்தில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் வீட்டிற்கு சென்று அவரது தந்தைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரிடம் நிருபர்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்காவது ஆதரவு அளிப்பாரா? என கேள்வி எழுப்பினர், அதற்கு சத்தியநாராயணா பதிலளிக்கும் போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்.
இப்போதும் மட்டுமின்றி எப்போதும் அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என்றார். உத்திரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்தியநாத் காலில் விழுந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது இது ஒன்றும் புதியது அல்ல. சிறு வயது முதலே ரஜினிகாந்த் யோகியின் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று தான் என்றார்.
- குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
- மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்பு டைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் 452 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு 3சக்கர கை மிதிவண்டியினை கலெக்டர் பழனி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






