என் மலர்
விழுப்புரம்
- பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அல்லாசாமி கோவில் தெரு வைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). சமையல்காரர். இவர் நேற்று இரவு வீட்டின் மாடியில் நடந்து கொண்டி ருந்தார். திடீரென நிலை தடுமாறிய பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பாஸ்கரை மீட்ட அவரது குடும்பத்தார், 108 ஆம்பு லன்ஸ் மூலம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.
திண்டிவனம் நகரம் லயன் சங்கம் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் வெண்மணி, பட்டணம் ஆத்தூர் ஊராட்சி,ஊரல் ஊராட்சி ஆகியவை இணைந்து திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் சிறப்பு மருத்துவம்,எலும்பு முறிவு சிகிச்சை, மருத்துவம், பொது மருத்துவம் ,முகப்பேர் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் சர்க்கரை நோய் மருத்துவம் ஆகியவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.
இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் இதற்கான ஏற்பாடுகளை ஊரல், பட்டணம், வெண்மணியாத்தூர், ஒன்றிய கவுன்சிலர் ஊரல் சிலம்பரசன், ஊரல் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை ஆகியோர் செய்து இருந்தனர்.லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர்.
செஞ்சி:
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான்.
இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக செஞ்சியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்களின் கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து தலைமைக்கழகம் விடுவித்தது.
இந்நிலையில் தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள மொக்தியார் அலி மஸ்தான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பெரும்புகை மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் ரோமியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மொக்தியார் அலி, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் ஆவார்.
இதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பள்ளியம்பட்டு கிராமம் கபூர் சாகிப் தெருவில் வசிக்கும் ஷேக்வாகித் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ஆவார்.
மேலும், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகியுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென தி.மு.க. தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் உள்ள 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சிவா அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள டீ கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- சிவா சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சிவா (வயது 52). இவர் அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள டீ கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம்-திருவண்ணாமலை சாலை சிப்காட் அருகே எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் பால்கறக்க சென்றார்
- மேலும் மகேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வி,புதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 70) முதியவர். இவர் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் வீடுகளில் உள்ள கறவை மாடுகளில் பால்கறக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் பால்கறக்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (43) முதியவர் வரும் வழியில் வந்து அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அந்த தகராறில் முதியவர் இந்திரஜித்தை மகேஸ்வரன் பலமாக தாக்கினார். இந்த தாக்குதலில் முதியவர் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மகேஸ்வரன் சாலையில் கிடந்த கல்லை எடுத்து முதியவர் தலையில் போட்டு கொலை செய்தார். உடனே மகேஸ்வரன் அங்கிருந்து தப்பி சென்றார். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் இந்திரஜித் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முதியவரை கொலை செய்த மகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான மகேஸ்வரன் மீது வளவனூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மகேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. வளவனூர் அருகே இன்று காலை பால்கறக்க சென்ற முதியவரை வழிமறித்து கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மளிகை கடையில் பதுக்கி விற்பனை செய்வதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது.
- சேகரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கத்தில் குட்கா பொருள்கள் மளிகை கடையில் பதுக்கி விற்பனை செய்வதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்துஅந்தக் கடையில் திடீரென சோதனை செய்த போலீசார் அங்கு பதுக்கி விற்பனை செய்த 20 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப், குட்கா,போதை பொருட்களை பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சேகரை( வயது 55) கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் மோசடி.
- ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
2019ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், நடைபாதையில் 2.1 மீட்டருக்கு பதிலாக 0.90 மீட்டர் மட்டுமே டைல்ஸ் கற்களை பதித்து மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளது.
- வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாகல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர், கட்டாயப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியை அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
- 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.
விழுப்புரம்:
வேலூர் மாவட்டம் வாழப்–பந்–தல் கிரா–மத்தை சேர்ந்–த–வர் மொழிச்–செல்–வம் மனைவி பரி–மளா(வயது 33). இவ–ருக்கு கடந்த ஜூலை மாதம் கடு–மை–யான வயிற்று வலி ஏற்–பட்டது. இதை–ய–டுத்து அவர் சிகிச்–சைக்–காக முண்–டி–யம்–பாக்–கத்–தில் உள்ள விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வக்–கல்–லூரி மருத்–து–வ–ம–னையில் அனு–ம–திக்–கப்–பட்டார். அவ–ருக்கு கர்ப்–பப்–பை–யில் 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.
அதைத் தொடர்ந்து கல்–லூரி முதல்–வர் கீதாஞ்–சலி தலை–மையில் மக–ளிர் மற்–றும் மகப்–பேறு துறை தலை–வர் ராஜேஸ்–வரி தலை–மை–யில் டாக்–டர்–கள் சங்–கீதா, இளை–ய–ராஜா, நித்–திய பிரி–ய–தர்–ஷினி, சிறு–நீ–ர–கத்–துறை நிபு–ணர்–கள் அரு–ண–கிரி, பாஸ்–கர், மயக்–க–வி–யல் நிபு–ணர் டாக்–டர்–கள் செந்–தில்–கு–மார், மகேந்–தி–ரன், திருச்–செல்–வம் உள்–ளிட்டோர் கொண்ட மருத்–துவ குழு–வி–னர் அறுவை சிகிச்சை செய்து, கட்–டியை அகற்றி சாதனை படைத்–த–னர்.
இது–கு–றித்து முதல்–வர் கீதாஞ்–சலி கூறு–கை–யில், இது போன்ற அறுவை சிகிச்–சையைதனி–யார் மருத்–து–வ–ம–னை–யில் செய்–தால் ரூ.2 லட்சம் வரை செல–வா–கும். ஆகவே ஏழை, எளிய மக்–கள் இது போன்ற அறுவை சிகிச்–சை–க–ளுக்கு அரசு மருத்–து–வ–மனையை பயன்–ப–டுத்–திக் கொள்ள வேண்–டும் என்–றார். அப்–போது மருத்–துவ துணை கண்–கா–ணிப்–பா–ளர் புக–ழேந்தி, நிலைய மருத்–துவ அலு–வ–லர் ரவிக்–கு–மார், உதவி நிலை மருத்–துவ அலு–வ–லர் நிஷாந்த், நிர்–வாக அலு–வ–லர் சக்–தி–வேல் மற்–றும் அறுவை சிகிச்சை செய்த டாக்–டர்–கள் குழு–வி–னர் உடன் இருந்தனர்.
- வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வருவார்.
- செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வடபுத்தூரை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் செந்தில்குமார் (வயது 43). அதே ஊரில் கேபிள் வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் கேபிள் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வருவார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை, மாயமாகி விட்டார். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே சந்தேகமடைந்த அவரது மனைவி ராதிகா செஞ்சி போலீசில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சித்திக் (வயது23). கடந்த ஏப்ரல் மாதம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுங்காயங்களுடன் சென்னை இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
- தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சா வடிகளில் வசூலிக்கப்படும் கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்தது. இதனை கண்டித்தும், சுங்கச்சா வடிகளில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விக்கி ரவாண்டி சுங்கச்சாவடியை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் முற்றுகையிட்டு இன்று காலை 11.30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வாகனங்கள் செல்லும் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் திடீர் பரபரப்பு நிலவியது.






