என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே இன்று காலை பயங்கரம்: முதியவர் கல்லால் தாக்கி கொலை
- காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் பால்கறக்க சென்றார்
- மேலும் மகேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வி,புதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 70) முதியவர். இவர் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் வீடுகளில் உள்ள கறவை மாடுகளில் பால்கறக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் பால்கறக்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (43) முதியவர் வரும் வழியில் வந்து அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அந்த தகராறில் முதியவர் இந்திரஜித்தை மகேஸ்வரன் பலமாக தாக்கினார். இந்த தாக்குதலில் முதியவர் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மகேஸ்வரன் சாலையில் கிடந்த கல்லை எடுத்து முதியவர் தலையில் போட்டு கொலை செய்தார். உடனே மகேஸ்வரன் அங்கிருந்து தப்பி சென்றார். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் இந்திரஜித் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முதியவரை கொலை செய்த மகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான மகேஸ்வரன் மீது வளவனூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மகேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. வளவனூர் அருகே இன்று காலை பால்கறக்க சென்ற முதியவரை வழிமறித்து கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






