என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • உறுதிமொழி எடுக்க வைத்த சப்-இன்ஸ்பெக்டர்
    • பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து அரசு பஸ்களில் பயணிக்கும் போது பஸ்களின் படி கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலை தளங்களிலும், முகநூல்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சசாய்சங் உத்திரவின் பேரில் சப்-–இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்–-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் பள்ளி நேரங்களிலும், முடியும் நேரங்களில் அரசு பஸ் போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன்படி நேற்று காலை திருவக்கரையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சப்–-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, பனையபுரம் செக் போஸ்டில் பஸ்சிலிருந்து இறக்கி அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை குறித்தும், படிக்கட்டு பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறி இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடை பிடிக்க உறுதி மொழி ஏற்க வைத்தார். மேலும் பஸ் படிக்கட்டில் தொங்கி மாணவர்கள் பயணம் செய்யும் போது பஸ் டிரைவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.

    • வெறிபிடித்த தெரு நாய் ஒன்று பொதுமக்களை கடித்தது.
    • அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்,சந்தை மேடு, களவாய் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்,முதியோர் உள்ளிட்ட பொதுமக்களை கடித்ததில் ஆதிலட்சுமி (வயது 50) சக்திவேல் (35), சாதனா( 14), மகாதேவன் (65), ஆகாஷ் (22) நவீன்குமார் (21) உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவ ர்கள் செஞ்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர். ஒரே நாய் கடித்ததில் பொதுமக்கள் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • செங்கல் சூளை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இளங்கோ என்பது தெரியவந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தேஸ். இவரது மனைவி வரலட்சுமி (வயது 32). இவர் கடந்த 3-ந்தேதி இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வரலட்சுமியை வழிமறித்து நகை, பணத்தை தருமாறு மிரட்டினார். உடனே சுதாரித்து கொண்ட வரலட்சுமி அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து ஓடிவந்து அவரை மடக்கிய மர்ம நபர் அவரிடமிருந்த தங்க வளையல், செல்போனை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வரலட்சுமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து வரலட்சுமியை வழிமறித்து தங்க வளையல், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்த நிலையில் வரலட்சுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போன் சிக்னல் மூலம் தேடியபோது திருவெண்ணைநல்லூர் அருகே டி.குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது வரலட்சுமியிடம் சென்போன் மற்றும் தங்க வளையலை திருடியதை ஒப்பு கொண்டார். உடனே இளங்கோவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க வளையல், செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே வில்வநத்தம் பகுதியில் கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை சாலை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை இந்த பணி தொடங்கியது. இதில் கிளியனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சரளா (வயது39) ஈடுபட்டு வந்தார். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது அங்கு நிறுத்தியிருந்த கலவை எந்திரத்தில் சரளாவின் புடவை எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அங்கு இருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பஸ்களின் இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    விழுப்புரம்:

    வருகிற 10மற்றும் 11 -ந் தேதிகளில் சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 8-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் மக்கள் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் எண்ணிக்கை குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ் களை ஏற்பாடு செய்யவும், பஸ்களின் இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    • 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார்.
    • நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார். அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், 5 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட 10-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    • உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ெரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது.
    • இவரை யாரோனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ெரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது. அவ்வழியே சென்ற வர்கள் இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். அவர்கள் அளித்த தகவலின் படி ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத முதியவர் யார், இவரை யாரோனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா, அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா, ரெயிலில் இருந்து தவழி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8.30 மணியிலிருந்து 9.30மணி வரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர், அவலூர்பேட்டை, வளத்தி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30மணி வரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மணிலா உள்ளிட்ட பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • கைசெலவுக்கு பணம் இல்லாததால் திருடியது அம்பலம்
    • ஆணியின் மதிப்பு ரூ.15 ஆயிரம்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பாக்கத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய நிலங்களில் பாசனத்திற்காக திறந்துவிடப்படும், அவ்வாறு ஏரியில் உள்ள மதகில் திருகுமுறை ஆணியை திறந்தால் அதிலிருந்து பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும். இந்த திருகுமுறை ஆணியை மர்மநபர்கள் சில நாட்களுக்கு முன்பாக திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கிளியனூர் போலீசார் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் காட்ரா ம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வெங்கடேசன் மகன் மதியரசன் (வயது 24) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் திருகுமுறை ஆணியை திருடிச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், கைச்செலவுக்கு பணம் இல்லாததால் இதனை திருடிச் சென்று பழைய இரும்பு கடையில் போட்டதாகவும், அந்த பணத்தை செலவு செய்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து அவரை கைது செய்த கிளியனூர் போலீசார், திருடிச் சென்ற திருகுமுறை ஆணியை எங்கு விற்பனை செய்தார். இந்த திருட்டு சம்பவத்தில் அவருடன் வேறு யாரேணும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப்போன திருகுமுறை ஆணியின் மதிப்பு ரூ.15 ஆயிரம் என பொதுப் பணித்து றை அதிகாரிகள் தெரிவி த்தனர்.

    • நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாமியார் தலையில் கல்லைப் போட்டு மருமகள் கொலை செய்தார்.
    • பாஸ்கரின் மனைவி சங்கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாண்டியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மனைவி சின்னபாப்பா (வயது 65). இவரது மகன் பாஸ்கர் (33). மாற்றுத்திறனாளி. அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

    மருமகள் சங்கீதாவின் நடத்தை தொடர்பாக மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அவ்வாறு நேற்று இரவு இருவருக்குமிடையே வாயத்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த சங்கீதா அருகில் இருந்த கல்லை எடுத்து மாமியார் சின்னபாப்பாவின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கிழே விழுந்த சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே துடித்துக் கொண்டிருந்தார்.

    அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டி இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    மூதாட்டி சின்னபாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாஸ்கரின் மனைவி சங்கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாமியாரின் தலையில் கல்லை போட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
    • 423 மனுக்கள் பெறப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 423 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பீட்டில் தையல் எந்திரமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,35,400 மதிப்பீட்டில் திறன்பேசியும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36,200 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டியும், 12 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் சாதிச்சான்றிதழ் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா , தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
    • மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வீட்டிற்குள் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மணிகண்டனின் மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு கொண்ட மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×