search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old Man Corpse"

    • உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ெரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது.
    • இவரை யாரோனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ெரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது. அவ்வழியே சென்ற வர்கள் இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். அவர்கள் அளித்த தகவலின் படி ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத முதியவர் யார், இவரை யாரோனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா, அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா, ரெயிலில் இருந்து தவழி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பு அருகே நேற்று மதியம் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இறந்து கிடந்த நபர் ஆறுமுகநேரி சுப்பிரமணிய புரத்தை சேர்ந்த தனசீலன் என்று தெரியவந்தது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் பஸ் நிறுத்தம் மற்றும் புற காவல் நிலையம் உள்ளது. இதன் அருகே நேற்று மதியம் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரப குமார், வேல் பாண்டியன் மற்றும் முதல் நிலைக் காவலர் கார்த்தி கேயன் உள்பட போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்த நபர் ஆறுமுகநேரி சுப்பிரமணிய புரத்தை சேர்ந்த தனசீலன் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது மருமகனான மாடத்தங்கம் என்பவரிடம் போலீசார் தகவல் தெரிவித்து வர செய்தனர். அங்கு வந்த மாடத்தங்கம், இறந்த முதியவர் தனது மனைவியின் தந்தை தான் என்று உறுதி செய்தார். ஆனால் தனது மனைவி உடனான தகராறு காரணமாக தனசீலன் பல வருடங்களாக எங்களிடம் எவ்வித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். இதனால் அவரது உடலை எங்களால் அடக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் போலீசாரே அந்த முதியவரின் பிணத்தை நேற்று மாலை யில் அடக்கம் செய் துள்ளனர். அவர்களின் இந்த மனிதாபிமான நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சர வணன் பாராட்டியுள்ளார்.

    இதனிடையே முதியவரான தனசீலன் எப்படி இறந்தார் என்பது பற்றி மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது.அவர் ஆதரவற்ற நிலையில் பலரிடமும் உதவி பெற்று வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு தொண்டை வலியும் காய்ச்சலும் இருப்ப தாக கூறிவந்துள்ளார். அவரை உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு சிலர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில்தான் அவர் நேற்று முன்தினம் இரவோ அல்லது நேற்று காலையி லேயோ இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர் கொரோனா காரணமாக இறந்தாரா என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அவர் இறந்து கிடந்த இடத்தில் சுகாதார நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் நெருக்கடி மிகுந்த ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பு பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து பொது மக்களிடையே எழு ந்துள்ள அச்சத்தை போக்கும் வகையில் சுகாதார துறை யினர் உரிய விசா ரணை நடத்தி நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×