என் மலர்
விழுப்புரம்
- 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்
- போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத் தில், புதுவை மாநிலத்தை யொட்டியுள்ள வானூர், கோட்டக்குப்பம், ஆரோ வில், குயிலாபாளையம் போன்ற பகுதிகளில் வெளி நாட்டினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் ஆரோவில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஆரோ வில் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பு அருகே 2 மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக் குப்பின் முரணான தகவலை கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து 4 வாலிபர்களையும் ஆரோ வில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர். புதுவை மாநிலம் எல்லைப் பிள்ளைச்சாவ டியை சேர்ந்த தீபக் (வயது 25), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆல்பர்ட் (29), நேரு நகரை சேர்ந்த வெங்கடேசன் (30), சக்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3/4 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள், 4 செல்போன்க ளை பறிமுதல் செய்தனர்.
- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீசார் பஸ்சினை நிறுத்தினர்.
- டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு பஸ் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டு சென்றது. இந்தப் பஸ் திண்டிவனத்தை கடந்து செஞ்சி நோக்கி சென்றது. அப்போது செஞ்சி கூட்ரோடு அருகில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீசார் பஸ்சினை நிறுத்தினர். உள்ளே சென்ற போலீ சார் பயணிகளின் பைகளை சோதனையிட்டனர். அப்போது, பஸ்சில் பயணிகளின் பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. இதனை திறந்து போலீசார் சோதனையிட்டனர்.
அதில் 30 குவார்ட்டர் மதுபான பாட்டில்களும், 10 புல் மதுபாட்டில்களும் இருந்தது. இந்த பை யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். எங்களுடையது இல்லை என பயணிகள் அனைவரும் கூறினர். இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுராந்தகம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் பழனி (வயது 40), தண்டலம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த முனிநாதன் மகன் சத்தியமூர்த்தி (38) ஆகிய இருவரும் மினி லாரியில் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர். 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், கடத்தி வரபரபட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
- 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
- சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
விழுப்புரம்:
சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், இதனை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டி டோல்கேட்டை தே.மு.க.தி.க.வினர் இன்று காலை முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். விக்கிரவாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார், தே.மு.தி.க.வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருந்தபோதும் தே.மு.தி.க.வினர் டோல்கேட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து தே.மு.தி.க.வினரை கைது செய்த போலீசார், சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
- எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழுப்புரம்:
திண்டிவனம் பாஜக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் வக்கீல் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் வக்கீல்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் சனாதானம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதி மீதும், சங்கரமடத்தை தகர்த்தெறி வோம் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
- பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம்:
வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். செயலாளர் சந்தியா காப்பர் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் அன்புமணி விளக்க உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல்,மரக்காணத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- மணலை அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
- ரோந்து போலீசார் மாட்டுவண்டியை மடக்கிப்பிடித்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யப்பன் (வயது 32), மணிகண்டன் (39). இருவரும் தனித்தனியே மாட்டு வண்டி வைத்துள்ளனர். இவர்கள் ஆற்றில் இருந்து மணலை அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, திருக்கோவிலூர் - திருவெண்ணைநல்லூர் சாலையில் இன்று அதிகாலை வந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ரோந்து போலீசார் மாட்டுவண்டியை மடக்கிப்பிடித்தனர். அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
- சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணை நல்லூர் அருகே பையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 30), பிரகாஷ் (40). இருவரும் உறவினர்கள். இவர்களின் வீடுகளுக்கு நடுவில் முள்வேலி உள்ளது. பிரகாஷ் வீட்டில் வளரும் மாடு முள்வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் குடும்பத்தார் 4 பேர் மீதும், பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- காரை போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
- காஞ்சிபுரம் ரவுடி தலையை துண்டாக வெட்டி கொலை செய்து வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளை நிற ஹோண்டா கார் வந்தது. இந்த காரை போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் குமரன் (வயது 21), விக்னேஷ் (23) என்பதும், இவர்கள் காஞ்சிபுரம் ரவுடி தலையை துண்டாக வெட்டி கொலை செய்து வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கார் மற்றும் காரில் இருந்த கத்தி, ஹெல்மெட் போன்றவைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களிடம் 2 வாலிபர்களையும் விக்கிரவாண்டி போலீசார் ஒப்படைத்தனர்.
- சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
விழுப்புரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் ஜோய்ஆண்டனி (வயது 50), முரளி தாஸ் (48). இருவரும் நண்பர்கள். இவர்கள் திண்டிவனத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஜோய்ஆண்டனி பலத்த ரத்த காயங்களுடன் தனியார் தங்கும் விடுதி வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக அவரது நண்பர் முரளி தாசை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் ஜோஸ்ஆண்டனி பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது. இருவருமே மது போதையில் இருப்பதால், போலீசாரால் சரியான முறையில் விசாரணை நடத்தமுடியவில்லை. அவர்களின் போதை தெளிந்தபின்னர் விசாரணை நடத்த போலீ சார் திட்டமிட்டுள்ளனர். காயமடைந்த ஜோஸ்ஆண்டனியில் கழுத்தில் காயம் உள்ளதால் அவ ரால் பேசமுடியவில்லை. அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- காணை போலீசார் விசாரணை
- உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 37). பூக்கடையில் பூக்களை மாலையாக கட்டும் பணிசெய்து வந்தார். திருமணமாகாதவர். இவரது உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது. அருகில் சென்று பார்த்தவர்கள், சுந்தரமூர்த்தி இறந்து கிடந்ததை உறுதி செய்து, காணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால் கழுவ சென்ற போது தவறி விழுந்தாரா, மதுபோதையில் தவறி விழுந்தாரா, யாரேனும் ஏரியில் தள்ளிவிட்டனரா என்பன போன்ற கோணங்களில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறுதிமொழி எடுக்க வைத்த சப்-இன்ஸ்பெக்டர்
- பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து அரசு பஸ்களில் பயணிக்கும் போது பஸ்களின் படி கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலை தளங்களிலும், முகநூல்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சசாய்சங் உத்திரவின் பேரில் சப்-–இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்–-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் பள்ளி நேரங்களிலும், முடியும் நேரங்களில் அரசு பஸ் போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று காலை திருவக்கரையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சப்–-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, பனையபுரம் செக் போஸ்டில் பஸ்சிலிருந்து இறக்கி அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை குறித்தும், படிக்கட்டு பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறி இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடை பிடிக்க உறுதி மொழி ஏற்க வைத்தார். மேலும் பஸ் படிக்கட்டில் தொங்கி மாணவர்கள் பயணம் செய்யும் போது பஸ் டிரைவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.






