என் மலர்
விழுப்புரம்
- சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணை நல்லூர் அருகே பையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 30), பிரகாஷ் (40). இருவரும் உறவினர்கள். இவர்களின் வீடுகளுக்கு நடுவில் முள்வேலி உள்ளது. பிரகாஷ் வீட்டில் வளரும் மாடு முள்வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் குடும்பத்தார் 4 பேர் மீதும், பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- காரை போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
- காஞ்சிபுரம் ரவுடி தலையை துண்டாக வெட்டி கொலை செய்து வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளை நிற ஹோண்டா கார் வந்தது. இந்த காரை போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் குமரன் (வயது 21), விக்னேஷ் (23) என்பதும், இவர்கள் காஞ்சிபுரம் ரவுடி தலையை துண்டாக வெட்டி கொலை செய்து வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கார் மற்றும் காரில் இருந்த கத்தி, ஹெல்மெட் போன்றவைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களிடம் 2 வாலிபர்களையும் விக்கிரவாண்டி போலீசார் ஒப்படைத்தனர்.
- சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
விழுப்புரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் ஜோய்ஆண்டனி (வயது 50), முரளி தாஸ் (48). இருவரும் நண்பர்கள். இவர்கள் திண்டிவனத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஜோய்ஆண்டனி பலத்த ரத்த காயங்களுடன் தனியார் தங்கும் விடுதி வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக அவரது நண்பர் முரளி தாசை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் ஜோஸ்ஆண்டனி பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது. இருவருமே மது போதையில் இருப்பதால், போலீசாரால் சரியான முறையில் விசாரணை நடத்தமுடியவில்லை. அவர்களின் போதை தெளிந்தபின்னர் விசாரணை நடத்த போலீ சார் திட்டமிட்டுள்ளனர். காயமடைந்த ஜோஸ்ஆண்டனியில் கழுத்தில் காயம் உள்ளதால் அவ ரால் பேசமுடியவில்லை. அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- காணை போலீசார் விசாரணை
- உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 37). பூக்கடையில் பூக்களை மாலையாக கட்டும் பணிசெய்து வந்தார். திருமணமாகாதவர். இவரது உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது. அருகில் சென்று பார்த்தவர்கள், சுந்தரமூர்த்தி இறந்து கிடந்ததை உறுதி செய்து, காணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால் கழுவ சென்ற போது தவறி விழுந்தாரா, மதுபோதையில் தவறி விழுந்தாரா, யாரேனும் ஏரியில் தள்ளிவிட்டனரா என்பன போன்ற கோணங்களில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறுதிமொழி எடுக்க வைத்த சப்-இன்ஸ்பெக்டர்
- பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து அரசு பஸ்களில் பயணிக்கும் போது பஸ்களின் படி கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலை தளங்களிலும், முகநூல்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சசாய்சங் உத்திரவின் பேரில் சப்-–இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்–-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் பள்ளி நேரங்களிலும், முடியும் நேரங்களில் அரசு பஸ் போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று காலை திருவக்கரையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சப்–-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, பனையபுரம் செக் போஸ்டில் பஸ்சிலிருந்து இறக்கி அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை குறித்தும், படிக்கட்டு பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறி இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடை பிடிக்க உறுதி மொழி ஏற்க வைத்தார். மேலும் பஸ் படிக்கட்டில் தொங்கி மாணவர்கள் பயணம் செய்யும் போது பஸ் டிரைவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.
- வெறிபிடித்த தெரு நாய் ஒன்று பொதுமக்களை கடித்தது.
- அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்,சந்தை மேடு, களவாய் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்,முதியோர் உள்ளிட்ட பொதுமக்களை கடித்ததில் ஆதிலட்சுமி (வயது 50) சக்திவேல் (35), சாதனா( 14), மகாதேவன் (65), ஆகாஷ் (22) நவீன்குமார் (21) உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவ ர்கள் செஞ்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர். ஒரே நாய் கடித்ததில் பொதுமக்கள் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- செங்கல் சூளை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
- இளங்கோ என்பது தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தேஸ். இவரது மனைவி வரலட்சுமி (வயது 32). இவர் கடந்த 3-ந்தேதி இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வரலட்சுமியை வழிமறித்து நகை, பணத்தை தருமாறு மிரட்டினார். உடனே சுதாரித்து கொண்ட வரலட்சுமி அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து ஓடிவந்து அவரை மடக்கிய மர்ம நபர் அவரிடமிருந்த தங்க வளையல், செல்போனை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வரலட்சுமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து வரலட்சுமியை வழிமறித்து தங்க வளையல், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்த நிலையில் வரலட்சுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போன் சிக்னல் மூலம் தேடியபோது திருவெண்ணைநல்லூர் அருகே டி.குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது வரலட்சுமியிடம் சென்போன் மற்றும் தங்க வளையலை திருடியதை ஒப்பு கொண்டார். உடனே இளங்கோவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க வளையல், செல்போனை பறிமுதல் செய்தனர்.
- கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
- கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே வில்வநத்தம் பகுதியில் கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை சாலை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை இந்த பணி தொடங்கியது. இதில் கிளியனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சரளா (வயது39) ஈடுபட்டு வந்தார். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது அங்கு நிறுத்தியிருந்த கலவை எந்திரத்தில் சரளாவின் புடவை எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அங்கு இருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பஸ்களின் இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம்:
வருகிற 10மற்றும் 11 -ந் தேதிகளில் சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 8-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் மக்கள் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் எண்ணிக்கை குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ் களை ஏற்பாடு செய்யவும், பஸ்களின் இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
- 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார்.
- நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார். அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், 5 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட 10-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
- உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ெரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது.
- இவரை யாரோனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா,
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ெரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது. அவ்வழியே சென்ற வர்கள் இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். அவர்கள் அளித்த தகவலின் படி ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத முதியவர் யார், இவரை யாரோனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா, அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா, ரெயிலில் இருந்து தவழி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8.30 மணியிலிருந்து 9.30மணி வரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.
- வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர், அவலூர்பேட்டை, வளத்தி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30மணி வரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மணிலா உள்ளிட்ட பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.






