search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே விபத்து சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் மீது லாரி மோதி பலி
    X

    வானூர் அருகே விபத்து சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் மீது லாரி மோதி பலி

    • மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி 1 கி.மீ. தூரம் இழுத்து சென்றதால் பரபரப்பு
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொஞ்ச மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சேகரின் மகன் சுதாகர் (வயது 26) விவசாயி. நேற்று இரவு சுதாகர் கிளியனூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர் அசோக் (27) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒழுந்தியாம்பட்டில் வேலை பார்க்கும் தனது தந்தை சேகரை பார்க்க சென்றனர். பின்னர் ஒழுந்தியாம்பட்டு அருகே சாலை ஒரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரி ஒன்று வந்தது.

    இதனையடுத்து லாரி ஒழுந்தியாம்பட்டு பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சுதாகர், இவரது நண்பர் அசோக் மீது வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் லாரி மோதி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் சிதறி விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே சுதாகர் துடிதுடித்து இறந்தார். அசோக் பலத்த படுகாயம் அடைந்தார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி டிரைவர் தொடர்ந்து அங்கு இருந்து லாரியை ஓட்டி சென்றார். அப்போது சுதாகர், அசோக் வந்த மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் சாலையில் வேகமாக உறசி பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பயங்கர சத்தத்தை கேட்டு பதறினர். பின்னர் அவர்கள் சாலையில் தறிகெட்டு வந்த லாரியை மடக்கி டிரைவரை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவ ண்ணன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விப த்தில் உயிரிழந்த சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடை ந்த அசோகை மீட்டு சிகிச்சை க்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த விகத்தை நடத்திய தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (40) லாரி டிரைவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நின்று பேசிக்கொண்டி ருந்தபோது லாரி மோதி விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×