என் மலர்
உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே மின்விசிறியில் தூக்குபோட்டு கல்லூரி மாணவி தற்கொலை
- வைஷ்ணவி மைலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆலகிராமம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகள் வைஷ்ணவி (வயது 19). இவர் மைலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்த இவரை இவரது அம்மா வீட்டுவேலை செய்யுமாறு கூறினார். ஆனால் வைஷ்ணவி வீட்டுவேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனால் வைஷ்ணவின் தாய் திட்டியுள்ளார். இதனால் விரக்தியில் இருந்த வைஷ்ணவி அவரது தாய் வீட்டிலிருந்து கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் கடைக்சென்று விட்டு வீட்டிற்கு வந்த வைஷ்ணவியின் தாய் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ெபரியதச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய வைஷ்ணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






