என் மலர்
நீங்கள் தேடியது "மேல்மலையனூர் கோவில்"
- பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார்.
- சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இங்குள்ள அக்னி குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் இந்த அக்னி குளத்தின் சிறப்பும் புராணமும் தெரிந்திருப்பதில்லை.
பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. இந்த கபாலம் சிவனுக்கு படைக்கும் உணவை உண்டு விடுவதால் பசியால் வாடிய சிவபெருமானுக்கு பித்து பிடித்து காடு மலைகளில் சுற்றி திரிந்தார்.
இதை பார்த்த பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார். மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது சிவபொருமானுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என மகா விஷ்ணு கூறியதுடன் சாப விமோசனத்திற்கான வழியையும் கூறுகிறார்.
இதன்படி பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார். பார்வதி தேவி திருமண வயதை அடைந்திருந்த நேரத்தில் காடுமலைகளில் சுற்றி திரியும் சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.
சிவபெருமான் வந்து இருப்பதை அறிந்து கொள்ளும் பார்வதி தேவி மறுநாள் நடக்கும் மயான கொள்ளையில் சிவனுக்கு படைக்க சுவையான உணவை கொண்டு வருகிறார். கடும் பசியில் இருக்கும் சிவனுக்கு பார்வதி தேவி கொடுக்கும் உணவை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரம்மன் கபாலம் உண்டு விடுகிறது. உணவை எடுக்க சிவபெருமானின் கரத்தில் இருந்துவிடுபட்டு கீழே இறங்கும் பிரம்மன் கபாலத்தை பார்வதி தேவி விஸ்வரூபம் எடுத்து தனது காலால் பூமியில் மிதித்து ஆட்கொள்கின்றார்.
இதன் பிறகு சிவபெருமானுக்கு சாப விமோசனம் ஏற்படுகிறது. கோபத்தினால் அக்னி பிழம்பாக மாறும் பார்வதி தேவி இங்குள்ள அக்னி குளத்தில் குளித்ததாக புராணம் கூறுகிறது. இதன் பிறகும் தனியாத பார்வதி தேவியின் கோபத்தை தணிக்க தேவர்கள் ஒன்றுகூடி தேர் திருவிழா நடத்தினர். இதில் தேவர்களே தேரின் பாகங்களாக இருப்பதாக விழா எடுக்கின்றனர். இந்த விழாவே இன்றுவரை மேல்மலையனூரில் மாசி திருவிழாவாக நடந்து வருகிறது.
- ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி சனிக்கிழமை வருவதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு 20, 21-ந்தேதியுடன் முடிவடைவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை:
அமாவாசை தினத்தையொட்டி செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். நாளை மறுநாள் (19-ந்தேதி) அமாவாசை வருவதால் பக்தர்கள் மேல்மலையனூர் கோவிலுக்கு செல்ல வசதியாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேடு, தாம்பரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி சனிக்கிழமை வருவதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
மேல்மலையனூர் கோவிலுக்கு புதன்கிழமை 500 சிறப்பு பஸ்களும், ரம்ஜானை யொட்டி வழக்கமாக செல்லும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்களும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 20-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைவதால் அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு 20, 21-ந்தேதியுடன் முடிவடைவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் தேவையான அளவிற்கு இயக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. நேற்று இரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு மகா சர்வ ராஜ்ய தாயினி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் காட்சி அளித்தார். இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா... அங்காளம்மா... என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இரவு 11.30 மணியளவில் தாலாட்டுப் பாடல்கள் பாடி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில் மாவட்ட கலெக்ட பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம் மஞ்சள் விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு கணேச ஜனனிஅலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர்.
இரவு 12 மணியளவில் தாலாட்டுப் பாடல்கள் பாடி அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்தவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவைடைந்தது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- 6-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.
- 7-ந்தேதி காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
26-ந்தேதி (புதன்கிழமை) மகா சிவராத்திரி, காலையில் கோபால விநாயகர் பூஜை, இரவு கொடியேற்றம், காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம், 27-ந்தேதி காலை மயானக் கொள்ளை, இரவு அம்மன் ஆண்பூத வாகனத்தில் வீதி உலா, 28-ந் தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
மார்ச்-1-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறும். 2-ந்தேதி மாலை 4 மணிக்கு மேல் தீமிதி திருவிழாவும், இரவு அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 3-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
4-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி (தேரோட்டம்) வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 5-ந் தேதி காலையில் அம்மன் யானை வாகனத்தில் கோவிலை வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 6-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 7-ந்தேதி காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது. 8-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை காலையில் அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. 10-ந்தேதி மாலையில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் வீதி உலாவும், இரவு கும்பப் படையலிட்டு காப்பு களைதலுடன் மாசிப் பெருவிழா முடிவடைகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் நாதஸ்வர கச்சேரி, இன்னிசை, கலைநிகழ்ச்சிகள், நாடகம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், 7 வம்சா வழியைச் சேர்ந்த மீனவ முறை பூசாரிகள் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.






