மேல்மலையனூர் கோவிலுக்கு 500 சிறப்பு பஸ்கள்- அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு

ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி சனிக்கிழமை வருவதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு 20, 21-ந்தேதியுடன் முடிவடைவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேல்மலையனூர் கோவிலுக்கு 500 சிறப்பு பஸ்கள்- அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
Published on

சென்னை:

அமாவாசை தினத்தையொட்டி செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். நாளை மறுநாள் (19-ந்தேதி) அமாவாசை வருவதால் பக்தர்கள் மேல்மலையனூர் கோவிலுக்கு செல்ல வசதியாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு, தாம்பரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி சனிக்கிழமை வருவதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

மேல்மலையனூர் கோவிலுக்கு புதன்கிழமை 500 சிறப்பு பஸ்களும், ரம்ஜானை யொட்டி வழக்கமாக செல்லும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்களும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 20-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைவதால் அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு 20, 21-ந்தேதியுடன் முடிவடைவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் தேவையான அளவிற்கு இயக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com