என் மலர்
விழுப்புரம்
- மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனியாக அவரது வீட்டிற்கு சென்றார்.
- மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார்.
விழுப்புரம்:
மரக்காணம் பகுதியில் பெண்களை தாக்கிவிட்டு நகைகளை வழிப்பறி செய்தல் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்லுதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடை பெறுவது வாடிக்கை யாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. மரக்காணம் அருகே உள்ள அழகன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ராஜேஷ் (வயது 19) இவர் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வழக்கமாக கல்லூரியி லிருந்து பஸ்சில் வந்து தாழங்காடு பகுதியில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனியாக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது எதிரில் வந் தஒருவர் ராஜேசை ஏதோ காரணத்திற்காக தாக்கிவிட்டு அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார். இச்சம்பவம் குறித்து மாணவன் ராஜேஷ் மரக்காணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
- உடனடியாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் கடந்த மாதத்தில் பூட்டிய வீடுகளை உடைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் தொடர் கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அன்னமங்கலம் கூட்டு சாலையில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடடத்தினர் விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் ரமேஷ் (வயது 51), காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள் (25), காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச் செல்வன் (25) என்பது தெரியவந்தது.
மேலும், இந்த 3 பேரும் சேர்ந்து கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் கைது செய்த வளத்தி போலீசார், வேறெ ங்கெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும், தற்போது எதற்காக ஒன்று கூடினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
- மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் உள்ளதாவது;-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்ட எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அதன்படி 4.9.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எஞ்சிய அனு மதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், வட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், எண்.56/ஏ, தாட்கோ வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- 4 வாலிபர்களும் பேர் தப்பியோட முயன்றனர்.
- சாராய விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே உள்ள முருங்கப்பாக்கம் ஏரிக்கரையில் 4 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரோஷனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். ஏரிக்கரைக்கு சென்ற போலீசாரை கண்டவுடன் 4 வாலிபர்களும் பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்த போலீசார், 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தினர்.
இதில். திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், வெங்கடேஷ், ஹரிதாஸ், மாணிக்கம் என்பதும், இவர்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 4 வாலிபர்கள் மீதும் வழக்கு ப்பதிவு செய்த போலீசார், இவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்குகி றார்கள், யார் யாருக்கு விநியோகம் செய்தார்கள் என்பது குறித்து விசாணை நடத்தி வருகின்றனர்.
- கியாஸ் காலி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
சேலத்திலிருந்து சென்னைக்கு கியாஸ் காலி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ராமச்ச ந்திரன் ஓட்டி வந்தார். இந்த டேங்கர் லாரி திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது சாலையைக் கடக்க முயன்ற டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டரின் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.
இந்த விபத்தினால் நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணை நல்லூர் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
- 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்
- போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத் தில், புதுவை மாநிலத்தை யொட்டியுள்ள வானூர், கோட்டக்குப்பம், ஆரோ வில், குயிலாபாளையம் போன்ற பகுதிகளில் வெளி நாட்டினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் ஆரோவில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஆரோ வில் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பு அருகே 2 மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக் குப்பின் முரணான தகவலை கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து 4 வாலிபர்களையும் ஆரோ வில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்த னர். புதுவை மாநிலம் எல்லைப் பிள்ளைச்சாவ டியை சேர்ந்த தீபக் (வயது 25), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆல்பர்ட் (29), நேரு நகரை சேர்ந்த வெங்கடேசன் (30), சக்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3/4 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள், 4 செல்போன்க ளை பறிமுதல் செய்தனர்.
- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீசார் பஸ்சினை நிறுத்தினர்.
- டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு பஸ் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டு சென்றது. இந்தப் பஸ் திண்டிவனத்தை கடந்து செஞ்சி நோக்கி சென்றது. அப்போது செஞ்சி கூட்ரோடு அருகில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீசார் பஸ்சினை நிறுத்தினர். உள்ளே சென்ற போலீ சார் பயணிகளின் பைகளை சோதனையிட்டனர். அப்போது, பஸ்சில் பயணிகளின் பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. இதனை திறந்து போலீசார் சோதனையிட்டனர்.
அதில் 30 குவார்ட்டர் மதுபான பாட்டில்களும், 10 புல் மதுபாட்டில்களும் இருந்தது. இந்த பை யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். எங்களுடையது இல்லை என பயணிகள் அனைவரும் கூறினர். இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுராந்தகம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் பழனி (வயது 40), தண்டலம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த முனிநாதன் மகன் சத்தியமூர்த்தி (38) ஆகிய இருவரும் மினி லாரியில் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர். 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், கடத்தி வரபரபட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
- 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
- சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
விழுப்புரம்:
சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், இதனை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டி டோல்கேட்டை தே.மு.க.தி.க.வினர் இன்று காலை முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். விக்கிரவாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார், தே.மு.தி.க.வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருந்தபோதும் தே.மு.தி.க.வினர் டோல்கேட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து தே.மு.தி.க.வினரை கைது செய்த போலீசார், சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
- எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழுப்புரம்:
திண்டிவனம் பாஜக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் வக்கீல் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் வக்கீல்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் சனாதானம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதி மீதும், சங்கரமடத்தை தகர்த்தெறி வோம் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
- பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம்:
வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். செயலாளர் சந்தியா காப்பர் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் அன்புமணி விளக்க உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல்,மரக்காணத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- மணலை அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
- ரோந்து போலீசார் மாட்டுவண்டியை மடக்கிப்பிடித்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யப்பன் (வயது 32), மணிகண்டன் (39). இருவரும் தனித்தனியே மாட்டு வண்டி வைத்துள்ளனர். இவர்கள் ஆற்றில் இருந்து மணலை அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, திருக்கோவிலூர் - திருவெண்ணைநல்லூர் சாலையில் இன்று அதிகாலை வந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ரோந்து போலீசார் மாட்டுவண்டியை மடக்கிப்பிடித்தனர். அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.






