search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளியனூர் அருகே  கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
    X

    விபத்துக்குள்ளான காரினை படத்தில் காணலாம்.

    கிளியனூர் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

    • கிளியனூர் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகியோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தந்தி ராயன்பேட்டையை சேர்ந்த வர் சந்திரன் (வயது 40). இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும், கவுன்சிலராகவும் உள்ளார். இவர் நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகியோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார். அப்போது கிளியனூர் அருகே தென் கோடிப்பாக்கம் மேம்பா லத்தை கடந்தபோது, சாலை யில் இருந்த தடுப்புக் கட்டை யில் மோதி கார் விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த கவுன்சிலர் சந்திரன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த பொது மக்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இத்தகவல் அறிந்து தென்கோடி பாக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். மேம்பாலம் அருகில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் இங்கு உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க வேண்டு மென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் பால முரளி மற்றும் போலீ சார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நெடுஞ்சா லைத் துறை அதிகாரி கள் வந்து உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோ மென பொதுமக்கள் கூறினர். இதையடுத்து நெடுஞ்சா லைத் துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் பேசி னார். ஒரு மாதகாலத்திற்குள் மேம்பாலம் பகுதியில் உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதி யளித்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் கூறினார். இதனையேற்ற பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் புதுவை - திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×