என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • திருவெண்ணைநல்லூர் அருகே தாய் மற்றும் மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரமடைந்த ராஜா, இளவரசியை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி மனைவி இளவரசி (வயது 34). இவரது 10 வயது மகன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜா (25), சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார். இத்தகவல் அறிந்த இளவரசி, எதற்காக எனது மகனை அடித்தாய் என, ராஜாவிடம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ராஜா, இளவரசியை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார்.இது தொடர்பாக திருவெண்ணை நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நேற்று முதல் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது;- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று முதல் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தில் பயனடைவதற்கு ஓ.டி.பி. எண் ஏதும் நடைமுறையில் இல்லை.

    இத்திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகை யினை எடுத்துக்கொள்ள லாம். மேலும் ஓ.டி.பி. எண் பகிர எவரேனும் தொலை பேசியில் கேட்கப்பட்டால் அவரது கைபேசி எண்ணை மாவட்ட கலெக்டர்அலு வலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்து க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கிகரிக்கப் பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • 45 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்வழுத ரெட்டி யில் உள்ள இ.எஸ். தொழில் நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கிகரிக்கப் பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்கும் அனைவரும் வேலை வாய்ப்புபெறலாம் என்று கல்லூரியின் தாளா ளர் செந்தில்குமார் தெரி வித்தார். முழுமையாக பயிற்சி முடித்த மாணவர்க ளுக்கு தமிழக அரசின் சான்றிதழ்வழங்கப் பட்டு வேலை வாய்ப்பு பெற்றுத்தர படும். இருச்சக்கர வாகனம் பழுது பார்த்தல், உதவி எலெக்ட்ரீசியன் பணிக ளுக்கு பயிற்சி அளிக்கப்படு கிறது.10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் 110/22 கி.வோ. துணைமின் நிலையத்தில் நாளை 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய விழுப்புரம் செயற்பொறியாளர் செந்தில்நாதன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின்தடை தேதி மாற்றியமைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரைஆலை பகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பெண்ணைவலம்,டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரஞர், கரடிப்பாக்கம், செம்மார், வலையாம்பட்டு, பையூர், கொங்கராயனூர், திருவெண்ணணைநல்லூர், சேத்தூர், அமாவாசைபாளையம், தி.கொளத்தூர், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஓட்டனந்தல், அண்டராயநல்லூர், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
    • 3 பேரையும் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் கடந்த மாதத்தில் பூட்டிய வீடுகளை உடைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் தொடர் கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அன்னமங்கலம் கூட்டு சாலையில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடடத்தினர் விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் ரமேஷ் (வயது 51), காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள் (25), காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச் செல்வன் (25) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் சேர்ந்து கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் கைது செய்த வளத்தி போலீசார், வேறெ ங்கெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும், தற்போது எதற்காக ஒன்று கூடினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம் மஞ்சள் விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு கணேச ஜனனிஅலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர்.

    இரவு 12 மணியளவில் தாலாட்டுப் பாடல்கள் பாடி அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்தவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவைடைந்தது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • இந்த கோவிலில் மூலவர் சன்னதி கட்டடத்தால் கட்டப்பட்டு உள்ளது.
    • உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் புதுக்குப்பம் அருகே புதுநகர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் சன்னதி கட்டடத்தால் கட்டப்பட்டு உள்ளது. கோவில் முன்பு உண்டியல் வெட்ட வெளியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கோவிலுக்கு வந்தனர்.

    இதனையடுத்து கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற ஊர் பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் கிளியனூர் ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    • வைஷ்ணவி மைலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆலகிராமம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகள் வைஷ்ணவி (வயது 19). இவர் மைலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்த இவரை இவரது அம்மா வீட்டுவேலை செய்யுமாறு கூறினார். ஆனால் வைஷ்ணவி வீட்டுவேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனால் வைஷ்ணவின் தாய் திட்டியுள்ளார். இதனால் விரக்தியில் இருந்த வைஷ்ணவி அவரது தாய் வீட்டிலிருந்து கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் கடைக்சென்று விட்டு வீட்டிற்கு வந்த வைஷ்ணவியின் தாய் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ெபரியதச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய வைஷ்ணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி 1 கி.மீ. தூரம் இழுத்து சென்றதால் பரபரப்பு
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொஞ்ச மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சேகரின் மகன் சுதாகர் (வயது 26) விவசாயி. நேற்று இரவு சுதாகர் கிளியனூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர் அசோக் (27) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒழுந்தியாம்பட்டில் வேலை பார்க்கும் தனது தந்தை சேகரை பார்க்க சென்றனர். பின்னர் ஒழுந்தியாம்பட்டு அருகே சாலை ஒரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரி ஒன்று வந்தது. 

    இதனையடுத்து லாரி ஒழுந்தியாம்பட்டு பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சுதாகர், இவரது நண்பர் அசோக் மீது வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் லாரி மோதி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் சிதறி விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே சுதாகர் துடிதுடித்து இறந்தார். அசோக் பலத்த படுகாயம் அடைந்தார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி டிரைவர் தொடர்ந்து அங்கு இருந்து லாரியை ஓட்டி சென்றார். அப்போது சுதாகர், அசோக் வந்த மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் சாலையில் வேகமாக உறசி பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பயங்கர சத்தத்தை கேட்டு பதறினர். பின்னர் அவர்கள் சாலையில் தறிகெட்டு வந்த லாரியை மடக்கி டிரைவரை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவ ண்ணன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விப த்தில் உயிரிழந்த சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடை ந்த அசோகை மீட்டு சிகிச்சை க்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த விகத்தை நடத்திய தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (40) லாரி டிரைவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நின்று பேசிக்கொண்டி ருந்தபோது லாரி மோதி விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தி.மு.க. அரசை கண்டித்து, மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    • பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாயில் ஆலம்பராகோட்டை அருகில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வலியுறுத்தியும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்தும், மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி மரக்காணம் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது.

    • வரும் 16-ந்தேதி நடக்க உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு
    • 361 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது;- விழுப்புரம் மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருகின்ற 16-ந்தேதி 50 அரசு, தனியார் பள்ளி மையங்களில் கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி, ஒவிய போட்டி, கவிதைப் போட்டி போன்ற போட்டிகளும், 10 கல்லூரி மையங்களில் கட்டுரை ப்போட்டி, பேச்சு போட்டி, ஒவிய போட்டி போன்ற போட்டிளும் நடைபெற உள்ளது. அரசு, தனியார் பள்ளி என 50 பள்ளி மையங்களில் அதனை சுற்றியுள்ள 361 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் 10 கல்லூரி மையங்களில் 50-க்கும் மேற்ப்பட்ட அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டிகளின் இறுதியில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

    மேலும், இப்போட்டி களில் வெற்றிபெரும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடை பெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இப்போ ட்டிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளார்கள். பள்ளி மாணவ மாண விகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பயன்பெறு மாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது.
    • அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திண்டிவனம் அருகே பாதிரி கிராமம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும்போது அதே வழியாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது. இதில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இது விபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரகாசன்,காஞ்சிபுரம் மாவட்டம் இடையான்புதூர் பகுதியை சேர்ந்த கண்டக்டர் ஜெயசீலன் மற்றும் பயணிகள் 3 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கண்டெய்னர் லாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×