செஞ்சி ஏரியில் முதியவர் பிணம்: போலீசார் விசாரணை

காசி கடந்த 18-ம்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லைகாசி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செஞ்சி ஏரியில் முதியவர் பிணம்:  போலீசார் விசாரணை
Published on

விழுப்புரம்:

செஞ்சி வட்டம் அனந்த புரம் அருகே குளிர்சுனை பகுதியைச் சேர்ந்தவர் காசி (வயது 70). இவர் கடந்த 18-ம்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் காணாமல்போன காசியை பல்வேறு இடங்க ளில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் காசி கிடை க்கவில்லை.

இந்நிலையில் நேற்று குளிர்சுன்ன பகுதி அருகில் உள்ள தாங்கல் ஏரியில் காசி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காசியின் அண்ணன் மகன் ஜோதி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com