search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Entitlement amount"

    • பற்று அட்டைகள் விணியோகம்
    • கலெக்டர் வழங்கினார்

    குடியாத்தம்:

    தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தி ல் முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றனர்.

    இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 443 பெண் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    அதே சமயம், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிலுவையில் வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறு வதற்கான பற்று அட்டைகள் (டெபிட் கார்டுகள்) வழங்குவதை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சி களில் பயனாளி களிடம் பற்று அட்டைகள் வழங்கப் பட்டன.

    அதன்படி, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெறு வதற்கான அட்டைகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

    வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 14 ஆயிரத்து 384 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட வருவாய் அலு வலர் மாலதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, நகராட்சி மன்றத் தலைவர்கள் சவுந்தர ராஜன் (குடியாத்தம்), பிரேமா (பேரணாம்பட்டு), ஒன்றிய குழு தலைவர்கள் சத்யானந்தன், பாஸ்கரன், சித்ரா ஜனார்த் தனன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
    • சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி 22 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான பற்று அட்டையை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உரிமைத்தொகை ரூ.1,000 பெற்றதால் மகளிர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
    • 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத் திற்காக பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் காணும் வகை யில் திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறார்.

    அந்த வரிசையில் குடும் பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை யாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திட்டம் கலை ஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதில் இணைத்துக் கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

    தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததைத்தொ டர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத்தொழில்கள் வாரி யத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் குடும்பத்தலை விகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பற்று அட்டைகளை வழங்கினார்.

    கலைஞர் மகளிர் உரி மைத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளி கூறியதா வது:-

    எனது பெயர் நாகவள்ளி (வயது 58). நான் கூலி வேலை செய்து வருகின் றேன். தினசரி கூலி வேலை செய்தால்தான் எனக்கு அன்றாட தேவைகளை பார்த்துக்கொள்ள முடியும். வயதான காலத்தில் எனது நிலைமையை கண்டு அக் கம்பக்கத்தினர் உதவி புரி வார்கள். அவர்களிடம் அடிக்கடி தொந்தரவு செய்ய முடியாது. எனக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இந்நி லையில் தான் முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப் படும் என அறிவித்திருந்தார்.

    இந்த திட்டத்தில் நான் பயன்பெறமுடியுமா என சந்தேகத்தில் இருந்து வந் தேன். அந்த நிலையில் என்னுடைய விண்ணப்பத் தினை அருகில் நடைபெற்ற முகாமில் அளித்தேன். எனது விண்ண ப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு எனக்கு ரூ.1000 என்னு டைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட் டதை கண்டு எண்ணிலடங்கா மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப் போன்ற மகளிர் நிலையை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்டி செயல்ப டுத்திவரும் தமிழ்நாடு முத லமைச்சருக்கு என் சார்பாகவும், என் னைப்போன்ற மகளிர்கள் சார்பாகவும் என் நெஞ் சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் தொகுத்து அளித்துள்ளனர்.

    • நேற்று முதல் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது;- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று முதல் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தில் பயனடைவதற்கு ஓ.டி.பி. எண் ஏதும் நடைமுறையில் இல்லை.

    இத்திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகை யினை எடுத்துக்கொள்ள லாம். மேலும் ஓ.டி.பி. எண் பகிர எவரேனும் தொலை பேசியில் கேட்கப்பட்டால் அவரது கைபேசி எண்ணை மாவட்ட கலெக்டர்அலு வலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்து க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • அமைச்சர் துரைமுருகன் நாளை தொடங்கி வைக்கிறார்
    • நிகழ்ச்சியில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.

    உரிமைத் தொகை

    பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செம்மையாக நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப மானது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடை விற்பனை யாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. விண்ணப்ப ங்கள் பதிவுசெய்யும் முகாம்கள் நடத்தப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு நாளை முதல் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தினை முதல் - அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

    2 ஆயிரம் பேர்

    இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நாளை காலை 10 மணிக்கு கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து சுமார் 2000 பயனாளிகளுக்கு உரிமைத் தொகையினை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெற 2.25 லட்சம் பேர் பதிவு செய்தனர்
    • இதுவரை 3.30 லட்சம் விண்ணப்பங்கள் வழ ங்கப்பட்டுள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 7 லட்சத்து 67 ஆயி ரத்து 316 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடை க்காரர்கள் மூலம் 2 கட்ட மாக மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ண ப்பம், டோக்கன் வழங்க ப்பட்டது. இதுவரை 3.30 லட்சம் விண்ணப்பங்கள் வழ ங்கப்பட்டுள்ளன. இதற்காக நடந்த பதிவேற்ற முகா ம்களில் இதுவரை 2.25 லட்சம் பேர் மட்டுமே பதி வேற்றம் செய்துள்ள னர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதா வது:- பதிவேற்றம் செய்ய ப்பட்ட விண்ண ப்பங்கள், மாநில அரசு தனி சாப்ட்வேர் மூலம் பரிசீ லனை செய்து, தகுதியான நபர்கள் மற்றும் தகுதி இல்லாத நபர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் குறு ஞ்செய்தி அனுப்பி உள்ளது. அந்த விவரங்கள் இது வரை மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அப்பணி முழுமையாக நிறைவு செய்த பின் எவ்வ ளவு பயனாளிகள் தகுதி யானவர்கள் என்ற விவரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • ராஜபாளையம் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவேற்ற முகாம் நடந்தது.
    • இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்

    முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டமென பொதுமக்களின் வரவேற்பு பெற்றுவரும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளின் விண்ணப்ப படிவங்கள் இணைய தளத்தில் சரியாக பதி வேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கிராமம் கிராமாக சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

    முகவூர் ஊராட்சி காமராஜ் திருமண மண்டபத்தி லும், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்றுவரும் முகாம்க ளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சரின் இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் கோடிக் கணக்கான பெண்கள் பயன் பெற உள்ளதாக கூறினார்.

    அப்போது அங்கு வந்த அழகம்மாள் என்பவர் முதல்-அமைச்சரின் திட்டத்தை குலவையிட்டு வாழ்த்தினார்.

    ஆய்வின்போது ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன் வட்டார வழங்கல் அலுவலர் தன்ராஜ், காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, கிளை செயலாளர்கள் தொந்தியப்பன், கனகராஜ், மாடசாமி ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக புதிய கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியில் பெண்கள் திரண்டனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக அரசு அறிவித்தபடி கடந்த சில நாட்களாக ரேசன் கடைகள் மூலமாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பொது மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போதே டோக்கனில் முகாமிற்கு செல்லும் நாள், டோக்கன் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கினால் தான் கலைஞர் உரிமை தொகை பெற முடியும் என ரேசன்கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கும்போதே கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதனடிப்படையிலேயே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நரிக்குடி கிளை யில் நேற்று கணக்கு தொடங்க ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் பதிவு முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் முதல் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் கள் தொடங்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் விண்ணப்ப பதிவு முகாம் களுக்கு சென்று பதிவுகள் செய்யவும் வேண்டியுள்ள தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஆனால் அதற்கான சரியான நேரம் இதுவல்ல எனவும் பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்தனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டருக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • வீடு வீடாக விண்ணப்பம் வினியோகம்

    வேலூர்:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வேலூருக்கு வந்தது. இந்த விண்ணப்பங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 699 ரேசன் கடைகள் உள்ளது. இந்தகடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 942 ரேசன் அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் அனைத்துக்கும் விண்ணப்பங்கள் வினியோகம் செய் யப்பட உள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருந்து அந்தந்த ரேசன்கடைகளுக்கு பிரித்து அனுப்புவதற்கான பணிகள் நடக்கிறது. கடைகளுக்கு விண்ணப்பங்கள் சென்றவுடன் பொதுமக்களுக்கு வீடு வீடாக வினியோகிக்கப்படும்.

    பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மகளிர் உரிமைத் தொகை முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளி களை தேர்வு செய்வதற்காக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இதற்காக மொத்தம் உள்ள 775 நியாய விலை கடைகளில் முதற் கட்டமாக 326 நியாய விலை கடைகளில் வருகிற 24-ந் தேதி முதல் ஆக.4-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக 449 நியாயவிலை கடைகளில் ஆக.5 முதல் 16 வரையும் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெற வுள்ளன.

    இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் குறிப்பாக இன்டர்நெட் வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, மின் இணைப்பு வசதி, கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வட்டவாரியாக குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.இந்த நிலையில் மூலக்கொத்தளம் மேல்நிலைப்பள்ளி முகாமில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். முன்னதாக ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் புதிய பஸ் நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களுக்கான பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின்போது, காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.டி.பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அஜீதா பர்வீன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×