search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் 2000 பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை
    X

    வேலூர் மாவட்டத்தில் 2000 பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை

    • அமைச்சர் துரைமுருகன் நாளை தொடங்கி வைக்கிறார்
    • நிகழ்ச்சியில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.

    உரிமைத் தொகை

    பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செம்மையாக நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப மானது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடை விற்பனை யாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. விண்ணப்ப ங்கள் பதிவுசெய்யும் முகாம்கள் நடத்தப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு நாளை முதல் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தினை முதல் - அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

    2 ஆயிரம் பேர்

    இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நாளை காலை 10 மணிக்கு கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து சுமார் 2000 பயனாளிகளுக்கு உரிமைத் தொகையினை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×