என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு விருந்தினர்"
- வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
- குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது வழக்கம்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா ஆகிய இருவரும் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணத்தின்போது, டெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் அவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே 2004-ம் ஆண்டு முதல் மூலோபாய உறவு நீடித்து வருகிறது. பல்வேறு துறைகளில் இருதரப்புக்கும் இடையே உறவுகள் வலுவடைந்து வருகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
- விழாவில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.
- புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற்குழும கட்டிடத்தில் நாகூர் நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2022-23 சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளில் நாகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறேன்.
நாகையில் வீடு எடுத்து தங்கி பணியாற்றுகிறேன். எம்.எல்.ஏ அலுவலகம் நாள்தோறும் இயங்குகிறது.
மனுக்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று, அவை மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன்.
இதுவரை 50சதவீதத்திற்கு மேல் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. நாகை தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தையும் சட்டமன்றத்தில் எழுப்பி உள்ளேன். புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகையில் அரசு சட்டக் கல்லூரி, சூடாமணி விகார் பகுதியில் அருங்காட்சியகம், சிப்காட் தொழிற் பூங்கா, திருமருகல் தனி தாலுகா, மறைமலை அடிகள் நினைவு அரங்கம், நாகை நகரில் அரசு மேல் நிலைப் பள்ளி, நாகை நகராட்சியை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். லயன்ஸ் சங்கம் சார்பில் ஷாநவாஸ் எம்எல்.ஏ.விற்கு பாராட்டு கேடயம் வழங்கப்ப ட்டது.
இந்நிகழ்வில் லயன்ஸ் தலைவர் கே.சேகர், செயலாளர் யு.சதீஸ் குமார், பொருளாளர் டி.காத்தை யன், மாவட்ட நிதி ஆலோ சகர் ஆர்.பெலிக்ஸ் ரா யன் உள்ளிட்ட லயன்ஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.
- ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.
கடலூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் கடலுார், மஞ்சக்குப்பம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்ற வர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.விழாவிற்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கினார். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 பேருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கண் கண்ணாடிகளை வழங்கி னார். விழாவில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குண சேகரன், பிரகாஷ், சரத் தினகரன், தமிழரசன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம், பாரூக் அலி, கர்ணன், அரசு காண்டிராக்டர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.
- இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
- சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி 22 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான பற்று அட்டையை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கலையரசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்ரீதர் பழனி, ராமராஜ், பாண்டுரங்கன், ராஜாராமன், ராமதுரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அன்பழகன், ராஜாமணி, கலைச்செல்வன், புருஷோத்தமன், ரஞ்சித், சதா, விக்கி, உமாபதி, ஆறுமுகம், லட்சுமி நாராயணன், கலைச்செல்வி, வசந்தராணி, ஆதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.






