அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
கடலூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் பேசினார். அருகில் மாவட்ட தலைவர் கலையரசன் உள்ளார்.
கடலூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் பேசினார். அருகில் மாவட்ட தலைவர் கலையரசன் உள்ளார்.
Published on

கடலூர்:

கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கலையரசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்ரீதர் பழனி, ராமராஜ், பாண்டுரங்கன், ராஜாராமன், ராமதுரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அன்பழகன், ராஜாமணி, கலைச்செல்வன், புருஷோத்தமன், ரஞ்சித், சதா, விக்கி, உமாபதி, ஆறுமுகம், லட்சுமி நாராயணன், கலைச்செல்வி, வசந்தராணி, ஆதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com