என் மலர்
நீங்கள் தேடியது "electrical"
- விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்
- படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்தார்,
புதுச்சேரி:
காரைக்கால் கடற்கரை சாலையில், கிளிஞ்சல் மேட்டைச்சேர்ந்த விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலை படகை பார்க்க வந்த போது, படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் காரைக்காலை அடுத்த பட்டி னச்சேரி பகுதி யைச்சேர்ந்த ரகுபதி (வயது38) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்த னர்.
- அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
- இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சேலம்:
சேலம், அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வீடு பூட்டப்பட்டு காலியாக இருந்த காலத்திற்கு மின்கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை என்று மஞ்சுளா மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நிலுவை கட்டணம் ரூ.4,120 கட்டிதான் ஆகவேண்டும் என்றும், தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மஞ்சுளாவுக்கு உதவி பொறியாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இதை தொடர்ந்து மஞ்சுளா மின்வாரியம் மீது சேவை குறைபாடு, மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கோரி தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலானய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் வழக்கு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.
அதனை விசாரித்த சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கணேஷ்ராம் வருகிற 6.1.2023 வரை மஞ்சுளா பெயரில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது எனவும், மேலும் மின் பகிர்மான கழக உதவி பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் அன்று ஆஜராகி தங்களது பதிலை தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டார்.
- கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர்.
- சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி கண்டர க்கோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மகன் மதன்ராஜ் (வயது19) அசாம் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ராதா காந்த் (36) இவர்கள் கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர். நேற்று கார் சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர். அப்போது மின்இணைப்புமீட்டர் பாக்ஸில் எதிர்பாரா தவிதமாக,தண்ணீர் பட்டு மின்சாரம் தாக்கியதில் மதன்ராஜ் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார், ராதா காந்த் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராதா காந்தை குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதன்ராஜ் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவம னையில்உள்ளது, இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தொண்டியில் மின் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
- தொண்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பல இடங்களில் மின்கம்பிகள் கை தொடும் அளவிற்கு தாழ்வாக சென்றது. பல இடங்களில் மின் விநியோகம் செய்யப்படும் உயர் மின் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றது. மேலும் தொண்டி கடற்கரை பகுதியாக இருப்பதால் உப்புக்காற்று மற்றும் காற்றின் ஈரப்பதம் காரணமாக மின்கம்பங்கள் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்திருந்தது.
இதனால் அசம்பாவி தங்கள் ஏற்ப டுவதை தடுக்கும் வகையில் தொண்டி மின்வாரிய அதிகாரிகளுடன் 4 மின் உதவி பொறியாளர்கள், 3 மின்பாதை ஆய்வாளர்கள், 2 சிறப்பு நிலை முகவர்கள், 52 கேங் மேன்கள், மதுரை மாவட்டம் விரகனூர், பனையூர், பெருங்குடி, கீழையூர் ஆகிய பகுதிகளி லிருந்து வந்து தொண்டியில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் ஊன்றியும், தாழ்வாக சென்ற மின் கம்பிகளை இழுத்து கட்டியும், தொய்வாக உள்ள மின் கம்பிகள் செல்லும் பகுதியில் இடையே புதிய மின் கம்பம் ஊன்றும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் சீனிராஜன் கூறும்போது, 2 நாட்களாக மின் வாரிய ஊழியர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. தொண்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது.
தொண்டியில் மின் பராமரிப்பு பணி 2 நாட்களில் முடிக்க முடியாது. தெருக்களின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் சிக்கலாக உள்ளது. வீடுகளுக்குச் செல்லும் இணைப்புகளில் விட்டுவிட்டு மின் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த மின் கம்பிகளை மாற்றி புதிய மின்வயர்கள் பொருத்த வேண்டும். அடிக்கடி இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்பட்டு மின் பழுதுகள் சரிசெய்ய பொதுமக்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோபி செட்டிபாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்து றையினர் தீயை அணைத்தனர்.
விசாரணையில் பனியன் கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதில் சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமநாதபுரம், கமுதி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகா் மின்பகிா்மான உதவிச் செயற்பொறியாளா் பாலமுருகன் கூறியதாவது:-
பட்டினம்காத்தான் துணை மின் நிலையத்தி லிருந்து மின்விநியோகம் பெறும் ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சேதுபதி நகா், ஓம்சக்தி நகா், தனியாா் பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், வசந்த நகா், கேணிக்கரை செட்டி தெரு, தாயுமானசுவாமி கோவில் தெரு, இந்திரா நகா், சிவன் கோவில், ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டிடிவிநாயகா் பள்ளி சாலை, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் கூறியதாவது:-
கமுதி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கமுதி நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலைவ நாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரி:
கோவா மாநிலம் மற்றும் புதுவை உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் என்ற அமைப்பு உள்ளது.
இந்த ஆணையத்திடம் ஆண்டு தோறும் யூனியன் பிரதேச அரசுகள் புதிய நிதி ஆண்டுக்கான மின்சார வினியோகம் தொடர்பாக வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்.
இதன் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்தவும் அனுமதி கோரப்படும். கடந்த ஜனவரி மாதம் புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மின் கட்டணம் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் புதுவையில் மின் கட்டணம் உயரவில்லை.
இந்த நிலையில் புதுவையில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.59 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல் தற்காலிகமான துணை கூடுதல் கட்டணம் 4 சதவீதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி சராசரியாக யூனிட்டுக்கு ரூ.5.68 வசூலிக்கப்பட உள்ளது.
வீட்டு உபயோக பயன் பாட்டுக்கு தற்போது ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, யூனிட்டுக்கு ரூ.1.50 ஆக உயர்த்தப்படுகிறது.
அதேபோல் 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்கிறது.
வர்த்தக பயன்பாட்டுக்கு நிரந்தர கட்டணம் ரூ.120 சேர்த்து 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.15-ல் இருந்து ரூ.5.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.15-ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 6.85-ல் இருந்து ரூ.7.20 ஆகவும் அதிகரிக்கிறது.
குடிசை தொழில் பயன் பாட்டுக்கு ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.1.30-ல் இருந்து ரூ.1.50 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மக்களின் அமோக ஆதரவால் சுமார் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், தேர்தல் முடிவு அறிவித்த மறுநாளே மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இது, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒழுங்குமுறை ஆணையம் சிபாரிசு செய்தும் அதை ஏற்க மறுத்த புதுவை அரசு தேர்தல் முடிந்ததும் அதை அமல்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது, புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து பேசி விட்டு கட்டண குறைப்பு முடிவை அறிவிப்போம் என்று கூறினார். எனவே, கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், விவசாயிகளின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஒரு மனு கொடுத்தார். அதில், மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய மின் இணைப்பு கேட்டு கடந்த 2000-ம் ஆண்டு மனு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணங்களை அதிகாரிகள் தெரிவித்து, அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. இதேபோல் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் பலர் மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.