வடலூரில் பரிதாபம் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர். சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர்.
வடலூரில்  பரிதாபம்  சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்த  வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி கண்டர க்கோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மகன் மதன்ராஜ் (வயது19) அசாம் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ராதா காந்த் (36) இவர்கள் கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர். நேற்று கார் சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர். அப்போது மின்இணைப்புமீட்டர் பாக்ஸில் எதிர்பாரா தவிதமாக,தண்ணீர் பட்டு மின்சாரம் தாக்கியதில் மதன்ராஜ் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார், ராதா காந்த் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராதா காந்தை குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதன்ராஜ் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவம னையில்உள்ளது, இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com