search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Service Center"

    • கலெக்டர் திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி சேவை மையத்தை திறந்து வைத்தார்.

    இதில், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயாமுரளி, வாலாஜா அரசு தலைமை மருத்து வமனையின் முதன்மை மருத்துவர் உஷாநந்தினி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • பல்வேறு திறன் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது தங்கள் துறையில் பயிலும் தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் கல்வி சார்ந்த தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் துறையின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் பீனிக்ஸ் ஸ்கிரீணிங் மையத்தின் நிர்வாக இயக்குனர் விஜய்ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான ஏற்பாட்டினை துறையின் தடய அறிவியல் பிரிவின் பொறுப்பாளர் மோகன் மற்றும் உதவி பேராசிரியர்கள் லின்சி அனாமிகா, சாண்ட்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

    இதுகுறித்து துறையின் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் கூறியதாவது:-

    பீனிக்ஸ் ஸ்கிரீணிங் மையமானது பெங்களூரில் செயல்பட்டு வரும் தடயவியல் சார்ந்த சேவைகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் நிறுவனமாகும். இதனுடன் எங்கள் துறையின் தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் பல்வேறு திறன் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

    குறிப்பாக மாணவர்க ளின் தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், துறை சார்ந்த திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கருத்தரங்குகள் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக கையெழுத்திடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் துறை சார்ந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

    • கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர்.
    • சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி கண்டர க்கோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மகன் மதன்ராஜ் (வயது19) அசாம் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ராதா காந்த் (36) இவர்கள் கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர். நேற்று கார் சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர். அப்போது மின்இணைப்புமீட்டர் பாக்ஸில் எதிர்பாரா தவிதமாக,தண்ணீர் பட்டு மின்சாரம் தாக்கியதில் மதன்ராஜ் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார், ராதா காந்த் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராதா காந்தை குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதன்ராஜ் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவம னையில்உள்ளது, இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐ.சி.சி.சி.) குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    அனைத்து துறைகளுடன் இந்த மையம் இணைக்கப்பட்டுள்ளது. 310 குறை–களை பொதுமக்கள் குறுந்தகவல், இணையதளம் மூலம் தெரிவித்தால் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் நவீன வசதிகளுடன் இணையதளம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மேயர் தெரிவித்தார்.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தயாரிப்பு உதவி மையம் நேற்று திறக்கப்பட்டது.
    சென்னை:

    நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தயாரிப்பு உதவி மையம் நேற்று திறக்கப்பட்டது. வருகிற 31-ந்தேதி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளாகும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையம் நேற்று திறக்கப்பட்டது.

    இந்த மையம் தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படுகிறது. முதல் நாளான நேற்று அதிகம் பேர் சென்று வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்தனர். இதற்காக வருமானவரி கணக்கு தயாரித்து தரும் பணியில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாளாக வருமானவரித்துறை அறிவித்து உள்ளது. மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

    வருமானவரி கணக்கை 31-ந்தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31-ந்தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

    மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந்தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந்தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

    அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 
    ×