search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu leaders"

    • இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
    • எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    விழுப்புரம்:

    திண்டிவனம் பாஜக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் வக்கீல் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் வக்கீல்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் சனாதானம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதி மீதும், சங்கரமடத்தை தகர்த்தெறி வோம் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

    • மூன்று நபர்கள் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
    • அங்கு பணியாற்றி வந்த ஹோட்டல் மேலாளர் அன்சார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் .

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் அஜய் மோகன் உட்பட 3 பேரும் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அங்கு சாப்பிட்டு விட்டு பில் கொடுத்துவிட்டு உணவு பொருள் காலாவதியானது. உணவுகள் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறி ஓட்டல் உரிமையாளர் இடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பணியாற்றி வந்த ஹோட்டல் மேலாளர் அன்சார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம், தனிப்பிரிவு தலைமை ஏட்டு சரவணன் உட்பட விரைந்து சென்று தகராறு ஈடுபட்டுக் கொண்டிருந்த சுரேஷ், அஜய், மோகன் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு 2 ஆண்டு களுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தற்போதே முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மாநிலம் முழுவதும் இந்து இயக்கங்களை சேர்ந்த 89 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இந்து இயக்கங்களை சேர்ந்த 5 பேருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.சென்னை வேப்பேரி, சூளை கூட்டான்குளம் பகுதியில் வசித்து வரும் பாரத் இந்து முன்னணி அமைப்பின் கிளை தலைவர் ஆர்.டி.பிரபு, பாரத் முன்னணியை சேர்ந்த அகில பாரத இந்து அமைப்பை சேர்ந்த விருகை சிவகுமார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முகுந்தன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான பாத்திமா ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்து இயக்க பிரமுகர்கள் 89 பேருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் தனிப்பட்ட பாதுகாப்பு பணியை காவலர்கள் தொடங்கியுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிக்காக 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 89 பேரில் பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நல்ல முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். சிலைகள் அமைக்கப்படும் இடங்களிலும், அவர்கள் இதர ஏற்பாடுகளை செய்வ தற்காக வெளியில் செல்லும் இடங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், இதனால் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருதியும் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். #NIARaids
    சென்னை:

    தமிழகத்தில் இந்து அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்ய பயங்கரவாத அமைப்பினர் சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ச்சியாக இந்து முன்னணி பிரமுகர்கள் மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர்.

    இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட் டது. இதன்படி தேசிய புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா என்ற அமைப்பின் நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

    கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது கோவை ரெயில் நிலையம் அருகே சதி திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, திண்டிவனம் இஸ்மாயில், ஓட்டேரி சலாவுதீன், பல்லாவரம் சம்சுதீன் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவை என்.எச்.ரோடு பகுதியை சேர்ந்த ஆசிக் ஆகியோர் பிடிபட்டனர்.

    இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக இருந்துள்ளார். மற்ற 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாட்டோடு இருந்துள்ளனர். சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது.

    அர்ஜூன் சம்பத், அன்பு மாரி ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த தகவல்கள் வெறுப்பேற்றும் வகையில் இருந்ததால் அவர்களை கொல்ல திட்டமிட்டதாக 5 பேரும் வாக்குமூலம் அளித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல், குனியமுத்தூரை சேர்ந்த சாகுல் அமீது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், மதகலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கு கடந்த மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவுக்கு மாற்றப்பட்டது. கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், இதுதொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து வழக்கு ஆவணங்களை கோவை போலீசார் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக அர்ஜூன் சம்பத், அன்புமாரி ஆகியோர் கடந்த வாரம் ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது தங்களுக்கு ஏற்கனவே பல்வேறு செல்போன் நம்பர்களில் இருந்து கொலை மிரட்டல் வந்ததற்கான ஆதாரங்களை ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் கைதான ஆசிக், ஆட்டோ பைசல், அன்வர் ஆகிய 3 பேரின் கோவை வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

    கோவை என்.எச்.ரோடு சந்திரன் வீதியில் உள்ள ஆசிக்கின் வீடு, உக்கடம் மஜித்காலனி வீரவாஞ்சி நகரில் உள்ள பைசலின் வீடு, குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் சாலையில் உள்ள அன்வர் ஆகியோரின் வீடுகளுக்கு தனித்தனி குழுவாக சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    எம்.கே.பி. நகரில் ஜாபர்சாதிக் வீட்டில் சோதனை நடைபெறும் காட்சி

    இதேபோல திண்டிவனம் இஸ்மாயில், சென்னை எம்.கே.பி.நகர் ஜாபர் சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஓட்டேரி சலாவுதீன் ஆகிய 4 பேரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    கைதானவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் எந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? என்பதை கண்டுபிடிப்பதற்காகவும், இது தொடர்பாக ஆதாரங்களை சேகரிப்பதற்காகவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NIARaids
    இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் கும்பலுக்கு உதவிய ஆட்டோ டிரைவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டத்துடன் ரெயிலில் கோவை வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கைதான திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார்.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவுதீன் மற்றும் கோவை என்.எச்.ரோடு ஆசிக் ஆகிய 4 பேரும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(29) என்ற 2 ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்வார்கள் என ஆசிக் தன்னிடம் கூறியதாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து பைசல், அன்வர் ஆகியோரை பிடிக்க வெரைட்டிஹால் போலீசார் தீவிரம் காட்டினர்.

    இது தொடர்பாக நேற்று பைசல் என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுத்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடைய பைசல் இவர் இல்லை என்பது தெரியவந்தது. பெயர் குழப்பத்தால் அவரை பிடித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பினர்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பைசலை தேடினர். இன்று அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, சதிதிட்டத்துக்கு உதவி செய்வதாக கூறிய பைசல் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள அன்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அச்சுறுத்தல் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இந்து இயக்க தலைவர்கள் 49 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ArjunSampath
    கோவை:

    இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக், சதாம் உசேன், சுபேர், அபுதாகீர் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தையடுத்து அச்சுறுத்தல் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு 24 மணிநேர துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேசன் உள்பட 12 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அவரது வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோவை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் மூகாம்பிகை மணி, குணா, சதீஷ், சுரேஷ், இளங்கோ, குளத்துபாளையம் சிவலிங்கம், ரத்தினபுரி சிவலிங்கம் உள்பட 37 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

    இதுதவிர முக்கிய பிரமுகர்கள் ஒருசிலர் வீடுகளுக்கும் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    ×