என் மலர்
நீங்கள் தேடியது "இந்து இயக்க தலைவர்"
இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதிதிட்டத்துடன் கோவை வந்த 5 பேரை கடந்த 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
கைதான திண்டிவனம் இஸ்மாயில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவு தீன் மற்றும் கோவை என்.எச். ரோடு ஆசிக் ஆகிய 5 பேர் மீதும் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யு.ஏ.பி.ஏ.) வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(25) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பைசலை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த அன்வரின் செல்போன் எண் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று அவரை மடக்கிப் பிடித்தனர்.
தனது நண்பரான ஆசிக் கேட்டுக் கொண்டதால் சதி திட்டத்துக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இவ்வழக்கில் கைதான ஆசிக் பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் படித்துள்ளார். அங்கு இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் யார்-யார்? ஆசிக்குடன் அவர்கள் எந்தெந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கோவை:
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டத்துடன் ரெயிலில் கோவை வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கைதான திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவுதீன் மற்றும் கோவை என்.எச்.ரோடு ஆசிக் ஆகிய 4 பேரும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(29) என்ற 2 ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்வார்கள் என ஆசிக் தன்னிடம் கூறியதாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து பைசல், அன்வர் ஆகியோரை பிடிக்க வெரைட்டிஹால் போலீசார் தீவிரம் காட்டினர்.
இது தொடர்பாக நேற்று பைசல் என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுத்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடைய பைசல் இவர் இல்லை என்பது தெரியவந்தது. பெயர் குழப்பத்தால் அவரை பிடித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பினர்.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பைசலை தேடினர். இன்று அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து போலீசார் கூறும்போது, சதிதிட்டத்துக்கு உதவி செய்வதாக கூறிய பைசல் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள அன்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






