உளுந்தூர்பேட்டையில் ஓட்டலில் ரகளை செய்த இந்து முன்னணியினர்

மூன்று நபர்கள் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.அங்கு பணியாற்றி வந்த ஹோட்டல் மேலாளர் அன்சார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் .
உளுந்தூர்பேட்டையில் ஓட்டலில் ரகளை செய்த  இந்து முன்னணியினர்
Published on

கடலூர்:

உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் அஜய் மோகன் உட்பட 3 பேரும் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அங்கு சாப்பிட்டு விட்டு பில் கொடுத்துவிட்டு உணவு பொருள் காலாவதியானது. உணவுகள் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறி ஓட்டல் உரிமையாளர் இடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணியாற்றி வந்த ஹோட்டல் மேலாளர் அன்சார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம், தனிப்பிரிவு தலைமை ஏட்டு சரவணன் உட்பட விரைந்து சென்று தகராறு ஈடுபட்டுக் கொண்டிருந்த சுரேஷ், அஜய், மோகன் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com