என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே காட்ராம்பாக்கம் ஏரி மதகில் இருந்த திருகுமுறை ஆணியை திருடிய வாலிபர் கைது
    X

    வானூர் அருகே காட்ராம்பாக்கம் ஏரி மதகில் இருந்த திருகுமுறை ஆணியை திருடிய வாலிபர் கைது

    • கைசெலவுக்கு பணம் இல்லாததால் திருடியது அம்பலம்
    • ஆணியின் மதிப்பு ரூ.15 ஆயிரம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பாக்கத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய நிலங்களில் பாசனத்திற்காக திறந்துவிடப்படும், அவ்வாறு ஏரியில் உள்ள மதகில் திருகுமுறை ஆணியை திறந்தால் அதிலிருந்து பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும். இந்த திருகுமுறை ஆணியை மர்மநபர்கள் சில நாட்களுக்கு முன்பாக திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கிளியனூர் போலீசார் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் காட்ரா ம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வெங்கடேசன் மகன் மதியரசன் (வயது 24) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் திருகுமுறை ஆணியை திருடிச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், கைச்செலவுக்கு பணம் இல்லாததால் இதனை திருடிச் சென்று பழைய இரும்பு கடையில் போட்டதாகவும், அந்த பணத்தை செலவு செய்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து அவரை கைது செய்த கிளியனூர் போலீசார், திருடிச் சென்ற திருகுமுறை ஆணியை எங்கு விற்பனை செய்தார். இந்த திருட்டு சம்பவத்தில் அவருடன் வேறு யாரேணும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப்போன திருகுமுறை ஆணியின் மதிப்பு ரூ.15 ஆயிரம் என பொதுப் பணித்து றை அதிகாரிகள் தெரிவி த்தனர்.

    Next Story
    ×