என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைப்பு
- 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார்.
- நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார். அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், 5 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட 10-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






