என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாமியார் தலையில் கல்லைபோட்டு கொன்ற மருமகள்
- நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாமியார் தலையில் கல்லைப் போட்டு மருமகள் கொலை செய்தார்.
- பாஸ்கரின் மனைவி சங்கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாண்டியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மனைவி சின்னபாப்பா (வயது 65). இவரது மகன் பாஸ்கர் (33). மாற்றுத்திறனாளி. அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
மருமகள் சங்கீதாவின் நடத்தை தொடர்பாக மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அவ்வாறு நேற்று இரவு இருவருக்குமிடையே வாயத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சங்கீதா அருகில் இருந்த கல்லை எடுத்து மாமியார் சின்னபாப்பாவின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கிழே விழுந்த சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே துடித்துக் கொண்டிருந்தார்.
அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டி இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மூதாட்டி சின்னபாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாஸ்கரின் மனைவி சங்கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாமியாரின் தலையில் கல்லை போட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






