விழுப்புரம் அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குபோட்டு சாவு

காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர். சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
விழுப்புரம் அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குபோட்டு சாவு
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குடுமியான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தொழிலாளி இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் மகள் ஜெயலட்சுமி (வயது 22) பி.எஸ்.சி பட்டதாரி. நேற்று காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர். 

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com