கண்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

செயற்பொறியாளர் எம்.சிவகுரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
கண்டமங்கலம் பகுதியில்  நாளை மின்தடை
Published on

விழுப்புரம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெட்டிக்குளம், வெள்ளாழங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com