என் மலர்
திருப்பூர்
- அகஸ்தியலிங்கம்பாளையம், ஆலாம்பாடி, கீரனூா், பூமாண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
- உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
காங்கயம்:
திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காங்கயம் காவல் துறையினா் அகஸ்தியலிங்கம்பாளையம், ஆலாம்பாடி, கீரனூா், பூமாண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள் விற்பனை செய்ததாக 10 கடைகளுக்கு 'சீல் வைத்ததுடன், ரூ.43 ஆயிரம் அபராதமும் விதித்தனா். மேலும், இதே போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
- இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.
- மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ.7,119 வரையிலும், கொட்டு ரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.
- இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா்
- புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன.
திருப்பூர்:
மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி அவிநாசியில் நடைபெற்றது.
இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா். இதில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) வி.ரத்தினமூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கணேசன், பாரதியார் பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளா் பி.சத்யா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில் தனித்திறன் மாணவா்கள், புதிய படைப்புகள் உருவாக்கும் மாணவா்கள் ஆகியோரை தோ்ந்தெடுத்து மாநில அளவில் தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க செய்வது, மேலும் புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 94 வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
- 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.
- விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
திருப்பூர்:
ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையில், தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியாா் நெல் விதை உற்பத்தி, விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு, பவானி, கோபி, தாராபுரம், காங்கயம் பகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு விலை, உண்மை நிலை விதைகளுக்கான ஆவணங்கள், முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கை உள்ளிட்டவற்றை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விதை இருப்புக்கும், புத்தக இருப்புக்கும் உள்ள வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதார ஆவணங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி கூறியதாவது, விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்போது, விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில் விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயா்-முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விதை விற்பனை தொடா்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் மற்றும் விதைக் கட்டுப்பாடு ஆணையத்தின்படி விதிமீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
- கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
- தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவிநாசி:
திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டது.
தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால், வீடு மற்றும் பொது சமூக கழிப்பறை, கழிவு சேகரிப்பு, கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதில் தூய்மைப் பணியாளா்களின் குடும்ப விவரங்கள் குறித்து சேகரித்து, அரசு நலத் திட்டங்களுக்கு உள்படுத்தபடவுள்ளது.
இது குறித்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்துக்கு, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலக உதவித் திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆண்டவன் தலைமை வகித்தாா். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
- தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்
உடுமலை:
உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு தனிப்படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி, தலைமை காவலர் கோவிந்தராஜு ஆகியோர் தலைமையில் போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது தளி பேரூராட்சி பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வகுமார் (வயது 43) என்பவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மொத்தம் 45.7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது,
- வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு கொடுமுடி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது, இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் தற்போது குடிநீர் குழாய் இணைப்பை சாலையோரத்தில் மாற்றி அைமக்கப்பட்டது. பின்னர் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு பணி மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டதால், நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதற்காக வெள்ளகோவில் நகராட்சியின் தலைவர் மு.கனியரசி மற்றும் ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோர் திருப்பூர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில் குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடுமலை:
.தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேங்காய் உற்பத்தி ஆலைகள் மற்றும் பருப்பு உடைப்பு களங்களில் பணிகள் மந்த நிலையை அடைந்துள்ளது.
- 800 தேங்காய் பருப்பு உடைக்கும் களங்களில் 100 களங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
காங்கயம்:
தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் காங்கயம் பிரதான இடத்ைத பிடித்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் வடமாநிலங்களில் கோலோச்சுகிறது. குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக வர்த்தகம் நடக்கிறது. அந்த அளவுக்கு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. குறிப்பாக காங்கயம், வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 180 தேங்காய் எண்ணெய் ஆலைகளும், 800-க்கும் மேற்பட்ட தேங்காய் பருப்பு உடைக்கும் உலர் களங்களும் உள்ளன.
தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் வெயில் தாக்கம் குறைவாகவும், காற்றில் ஈரப்பதம் நிறைந்துள்ளது. இதனால் தேங்காய் உற்பத்தி ஆலைகள் மற்றும் பருப்பு உடைப்பு களங்களில் பணிகள் மந்த நிலையை அடைந்துள்ளது. 800 தேங்காய் பருப்பு உடைக்கும் களங்களில் 100 களங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களாக காங்கயத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக இந்த பகுதியில் தேங்காய் பருப்பு உடைக்கப்பட்டு வெயிலில் காயவைத்த நிலையில் தற்போது மழைநீரில் நனையாமலிருக்க பிளாஸ்டிக் மற்றும் தார்ப்பாய் கவர்களால் மூடப்பட்டுள்ளது.
- ரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன் ஆகியோர் விநாயகர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- நத்தக்காடையூர். காங்கயம் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகில் உள்ள பரப்புமேடு என்ற இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி பொறியாளர் கே. ஆர். கோபாலகிருஷ்ணன், வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன் ஆகியோர் விநாயகர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நத்தக்காடையூர். காங்கயம் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
- பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது
- மாதப்பூர் ஊராட்சி பகுதி களிமண் பூமியாகும். இதனால் மழைக்கு மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன.
பல்லடம்:
பல்லடத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பச்சாபாளையம் காலனி, பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்கிடையே பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறில் மழையினால் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அங்கு நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக போடப்பட்டிருந்த மண் மழையினால் அரித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் கூறுகையில், மாதப்பூர் ஊராட்சி பகுதி களிமண் பூமியாகும். இதனால் மழைக்கு மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. எனவே மின்கம்பங்கள் அமைக்கும் போது கான்கிரீட் கலவை போட்டு அமைக்க வேண்டும். நேற்று பெய்த மழையினால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் மின்கம்பம் அருகே இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே மின்கம்பங்கள் அமைக்கும் போது பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக உப்பாறு அணையில் 84 மில்லி மீட்டர் மழையும், பல்லடத்தில் 50 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- லங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
- கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
உடுமலை:
உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி வாய்க்கால் மூலமாக 2 ஆயிரத்து786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கை கொடுக்க வில்லை. இதனால் திருமூர்த்தி அணைப்பகுதி மற்றும் பாசன பரப்புகளில் கடும் வறட்சி நிலவி வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 1-ந்தேதி தேதி பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் 4- ம் மண்டல பாசனத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த மாதம் 20- ந்தேதி தேதி, இந்த மாதம் 11-ந் தேதி வரை மொத்தம் 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் பொள்ளாச்சி தாலுகா சீலக்காம்பட்டி அருகே கடந்த மாதம் 22-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்றது. பின்னர் 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த 3-ந் தேதி சீலக்காம்பட்டி, மலையாண்டி பட்டினத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சீரமைப்பு பணி முடிக்கப்பட்டு 5-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் 7 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் பாசன நிலங்கள் முழுமையாக தண்ணீரை பெற இயலாத நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் கூடுதலாக தண்ணீர் கோரி கருத்துரு அனுப்பப்ப ட்டது. அதன் பேரில் இன்று முதல் வருகிற 24-ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






