search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிப்பு
    X

    மழையால் தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 

    மழையால் தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிப்பு

    • தேங்காய் உற்பத்தி ஆலைகள் மற்றும் பருப்பு உடைப்பு களங்களில் பணிகள் மந்த நிலையை அடைந்துள்ளது.
    • 800 தேங்காய் பருப்பு உடைக்கும் களங்களில் 100 களங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன‌.

    காங்கயம்:

    தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் காங்கயம் பிரதான இடத்ைத பிடித்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் வடமாநிலங்களில் கோலோச்சுகிறது. குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக வர்த்தகம் நடக்கிறது. அந்த அளவுக்கு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. குறிப்பாக காங்கயம், வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 180 தேங்காய் எண்ணெய் ஆலைகளும், 800-க்கும் மேற்பட்ட தேங்காய் பருப்பு உடைக்கும் உலர் களங்களும் உள்ளன.

    தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் வெயில் தாக்கம் குறைவாகவும், காற்றில் ஈரப்பதம் நிறைந்துள்ளது. இதனால் தேங்காய் உற்பத்தி ஆலைகள் மற்றும் பருப்பு உடைப்பு களங்களில் பணிகள் மந்த நிலையை அடைந்துள்ளது. 800 தேங்காய் பருப்பு உடைக்கும் களங்களில் 100 களங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில தினங்களாக காங்கயத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக இந்த பகுதியில் தேங்காய் பருப்பு உடைக்கப்பட்டு வெயிலில் காயவைத்த நிலையில் தற்போது மழைநீரில் நனையாமலிருக்க பிளாஸ்டிக் மற்றும் தார்ப்பாய் கவர்களால் மூடப்பட்டுள்ளது.

    Next Story
    ×