search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Start of work"

    • கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டது.

    தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால், வீடு மற்றும் பொது சமூக கழிப்பறை, கழிவு சேகரிப்பு, கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதில் தூய்மைப் பணியாளா்களின் குடும்ப விவரங்கள் குறித்து சேகரித்து, அரசு நலத் திட்டங்களுக்கு உள்படுத்தபடவுள்ளது.

    இது குறித்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்துக்கு, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலக உதவித் திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆண்டவன் தலைமை வகித்தாா். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

    • அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ந் தேதி நடைெபறவுள்ளது.
    • சிவாச்சாரியா்கள், அறங்காவலா் குழுவினா், உபயதாரா், கோவில் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
    • மீன் பிடிப்பதற்காக படகில் செல்லும் முகத்துவாரம் பகுதி ஏரியும்,கடலும் சந்திக்கும் இடம் ஆகும்.
    • மீனவ கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியா வின் மிகப்பெரிய இரண்டா வது உவர்ப்பு நீர் ஏரியாகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 1500-க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    இவர்கள் மீன் பிடிப்பதற்காக படகில் செல்லும் முகத்துவாரம் பகுதி ஏரியும்,கடலும் சந்திக்கும் இடம் ஆகும். பருவ கால மாற்றத்தினாலும் கடல் அலையின் சீற்றத்தினாலும் அந்த இடத்தில் அடிக்கடி மணல் திட்டுக்கள் உருவாகி முகத்துவாரம் அடைபட்டு போவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். ஒவ்வொரு வருடமும் மீனவர்கள் ஒன்று சேர்ந்து அடைபட்ட மணல் திட்டு பகுதிகளை படகு மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் உள்ளே சென்று தூர்வாரி சென்று வந்தனர்.

    இதைத்தொடர்ந்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றி உள்ள மீனவ கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பழவேற்காடு முகத்துவார பணிக்கு ரூ.26.85 கோடி ஒதுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பழவேற்காடு முகத்துவார பணி இன்று காலை தொடங்கியது. இதனால் மீனவர்களின் 40 வருட கனவு நிறைவேறி உள்ளது. மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
    • சாமிநாதன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர்:

    ஊத்துக்குளி தாலுகா, மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து சிவசக்தி நகர், எம்.எஸ்.நகர், பொன்னியகவுண்டனூர், செம்பாவள்ளம், ஆர்.எஸ்.புதூர் வழியாக காங்கயம் சாலை வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த சாலை அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது கிராம சாலைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை மறுசீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் என்.பிரபு தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இக்கோவில்களுக்கு பக்தா்களால் தானமாக வழங்கப்பட்ட ஏறத்தாழ 500 ஏக்கா் நிலங்கள் உள்ளன.
    • கோவில் நிலங்களை மீட்டு அதிக வருமானம் வரும் வகையில் முறைப்படி குத்தகைதாரா்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில், தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி, வள்ளியிரச்சல் அழகு நாச்சியம்மன், மாந்தீஸ்வரா், வரதராஜப் பெருமாள், புஷ்பகிரி வேலாயுதசாமி, முத்தூா் சோழீஸ்வரா், மங்கலப்பட்டி உமய காளியம்மன், பாண்டீஸ்வரா், நாச்சிபாளையம் செல்லாண்டியம்மன், சேனாபதிபாளையம் திருமலை அம்மன், குருக்கத்தி செல்லாண்டியம்மன், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரசுவாமி, வரதராஜப் பெருமாள், காவலிபாளையம் பொன்னாச்சியம்மன், உத்தமபாளையம் மாரியம்மன், காசிவிஸ்வநாதா், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி, மாரியம்மன், கண்ணபுரம் விக்ரம சோழீஸ்வரா், மாரியம்மன், செல்வவிநாயகா், பூசாரிவலசு திருமங்கிரிகுமாரசாமி, பொன்பரப்பி கன்னிமாா் சுவாமி ஆகிய கோவில்கள் உள்ளன.

    இக்கோவில்களுக்கு பக்தா்களால் தானமாக வழங்கப்பட்ட ஏறத்தாழ 500 ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில் பராமரிப்புக்கு பணம் தருவதாக ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் பேரில் பெரும்பாலான இந்த நிலங்கள் பல தலைமுறைகளாக பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அரசு உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைப்படுத்த தற்போது அறநிலையத் துறை நில அளவையாளா் ராகவேந்திரா் தலைமையில், செயல் அலுவலா் ராமநாதன் முன்னிலையில் அளவீடு செய்யும் பணி துவங்கி ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. கோவில் நிலங்களை மீட்டு அதிக வருமானம் வரும் வகையில் முறைப்படி குத்தகைதாரா்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கட்டிட கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டும் பணிவிரைந்து நடைபெற்று வருகிறது.
    • கூடியவிரைவில் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த பஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் கடந்த 10 வருடங்களுக்கு முன் அவினாசி கைகாட்டிபுதூர் அருகே புதியபஸ் நிலையம் அமைக்கப்பட்டு பழைய பஸ் நிலைய கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நீண்டகாலமாக பழைய பஸ் நிலைய இடம் பயன்பாடின்றி கிடந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அந்த இடத்தில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் இரண்டு தளங்களுடன் புதிய வணிக வளாகம் அமைப்பதற்காக 2 மாதம் முன்பு பூமிபூஜை நடந்தது. இதையடுத்து கட்டிட கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டும் பணிவிரைந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கி தொடர்ந்து பணி நடைபெற உள்ளது. கூடியவிரைவில் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றனர்.

    ×