search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B.A.B. Drain irrigation"

    • லங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி வாய்க்கால் மூலமாக 2 ஆயிரத்து786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கை கொடுக்க வில்லை. இதனால் திருமூர்த்தி அணைப்பகுதி மற்றும் பாசன பரப்புகளில் கடும் வறட்சி நிலவி வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 1-ந்தேதி தேதி பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் 4- ம் மண்டல பாசனத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த மாதம் 20- ந்தேதி தேதி, இந்த மாதம் 11-ந் தேதி வரை மொத்தம் 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் பொள்ளாச்சி தாலுகா சீலக்காம்பட்டி அருகே கடந்த மாதம் 22-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்றது. பின்னர் 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த 3-ந் தேதி சீலக்காம்பட்டி, மலையாண்டி பட்டினத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சீரமைப்பு பணி முடிக்கப்பட்டு 5-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் 7 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் பாசன நிலங்கள் முழுமையாக தண்ணீரை பெற இயலாத நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் கூடுதலாக தண்ணீர் கோரி கருத்துரு அனுப்பப்ப ட்டது. அதன் பேரில் இன்று முதல் வருகிற 24-ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×