என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ -மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
    • 33 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் படித்தபோது நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர்.

    பணகுடி:

    வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப்பள்ளியில் 1989-90-ம் ஆண்டு பிளஸ்- 2 வகுப்பில் பயின்ற மாணவ-மாணவிகளின் 33 ஆண்டுகளை கடந்த சந்திப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ -மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 33 ஆண்டு களுக்கு பிறகு பள்ளியில் படித்த போது நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பாடல் பாடியும், முன்னாள் மாணவியின் மகள் பரத நாட்டி யம் ஆடியும் சந்திப்பு நிகழ்ச்சியை வெகுவாக கவர்ந்தனர்.

    • 2 பேரும் சம்பவத்தன்று சிங்கம்பத்தில் உள்ள பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
    • ஆத்திரம் அடைந்த விக்னேஷ், சிறுவனை அவதூறாக பேசி, கற்களால் தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கலுங்கடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும், கீழப்பத்தையை சேர்ந்த லெட்சுமணன் மகன் விக்னேசும் (வயது26) நண்பர்கள் ஆவார்கள்.

    இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சிங்கம்பத்தில் உள்ள பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ் சிறுவனிடம், அவரது செல்போனை கேட்டுள்ளார்.

    அதற்கு சிறுவன் தனது செல்போனை கொடுக்க மறுத்து விட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த விக்னேஷ், சிறுவனை அவதூறாக பேசி, கற்களால் தாக்கினார்.

    இதில் காயமடைந்த சிறுவன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி.ராஜு மற்றும் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறுவனை தாக்கிய விக்னேசை தேடி வருகின்றனர்.

    • தங்கராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடந்தார்.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை அருகே உள்ள இட்டேரி கேபிரியேல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மகன் தமிழரசன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (26).

    தங்கராஜ் மனைவி இறந்துவிட்டதால் அவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்தார். இதற்காக தனது மருமகள் முத்துமாரியை வீட்டை காலி செய்யக் கூறி வற்புறுத்தினார். ஆனால் இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கடந்த ஏப்ரல் 7-ந் தேதி தங்கராஜூக்கும், அவரது மருமகளுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், முத்துமாரியை தலையில் இரும்பு கம்பியால் அடித்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துமாரி 9-ம் தேதி உயிரிழந்தார்.

    இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த தங்கராஜ் நேற்று ரெட்டியார்பட்டியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவில் அங்குள்ள தனி அறையில் தூங்கச் சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாததால் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தங்கராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணின் வீட்டிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
    • மகள் தன்னை தவிக்க விட்டு சென்றதால், மனவேதனையுடன் அழுதபடி அவரது தாயாரும் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவரது மகள் ஆறுமுக கனி (வயது 19). இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    நாங்குநேரி அருகே திருமலைபுரத்தை சேர்ந்த நயினார் என்பவரது மகன் பாலசுப்பிரமணியன்(வயது 21). இவரும் பேட்டையில் ஆறுமுக கனி படித்த அதே கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் பழக்கமாகி காதல் ஏற்பட்டது. இது பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆறுமுக கனியை மேற்கொண்டு படிக்க மறுத்து வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்த ஆறுமுக கனி திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் சீவலப்பேரி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் தான் காதலித்த பால சுப்பிரமணியனை திருமணம் செய்து கொண்டு பாளை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    இதுகுறித்து பெண்ணின் வீட்டிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு ஆவேசத்துடன் வந்த ஆறுமுக கனியின் தாயார் நெஞ்சில் அடித்து அழுது புலம்பினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில், உனது தந்தை இறந்து ஒரு வருடத்தில் இப்படி செய்து விட்டாயே என்று கூறி அடிக்க பாய்ந்தார். உடனே அங்கு நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் அவரை பிடித்து இழுத்து சென்றனர்.

    தொடர்ந்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் கேட்டபோது, நான் எனது கணவருடன் செல்கிறேன் என தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு திருமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.

    மகள் தன்னை தவிக்க விட்டு சென்றதால், மனவேதனையுடன் அழுதபடி அவரது தாயாரும் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

    • தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ், லாரிகள் செல்ல மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி சாலையில் பழைய பேட்டை கண்டியபேரி அருகே சாலை வளைவில் அமைந்துள்ள பழமையான தரைப்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

    இதனையொட்டி அந்த வழியாக நெல்லையில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் பஸ், லாரிகளும், இதே போல் மறு மார்க்கமாக தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ் மற்றும் லாரிகள் செல்வ தற்கும் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அதற்கான முன்னோட்டம் இன்று நடைபெற்றது. அதே நேரத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் கண்டியப்பேரி வழியாக செல்வதற்கு தற்காலிகமாக மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில் தென்காசிக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீஸ்வரன் நகர், பேட்டை, திருப்பணி கரிசல் குளம் வழியாக அபிஷேகப்பட்டிக்கு செல்லாமல் காட்சி மண்டபத்தில் இருந்து வழுக்கோடை வழியாக கண்டியப்பேரி பகுதிக்கு சென்று விட்டது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருபுறமும் வாக னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.

    தகவல் அறிந்த போக்கு வரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து போக்கு வரத்து நெருக்கடியை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டு, புதுப் பேட்டை ரொட்டி கடை பஸ் நிறுத்தம் வழியாக கோடீஸ்வரன் நகருக்கு சென்று மீண்டும் வழுக்கோ டை வந்து தொண்டர் சன்னதி வழியாக மாநருக்குள் இயக்கப்பட்டது.

    இந்த நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இன்று சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் புதுப்பேட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனையொட்டி ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு வாகன போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

    காலையில் தென் காசியில் இருந்து வரும் பஸ்கள் எளிதாக நெல்லை க்கு வந்து விடும் நிலையில் நெல்லை யிலிருந்து தென்காசி செல்வதற்கு பெரும் பாலான பகுதி களை பஸ் சுற்றி செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகரிப்ப தாக பயணி கள் புகார் கூறினர்.

    • கோபால் என்ற வியாபாரி தனக்கு சைக்கிள் வாங்கி தர எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக கோபாலிடம் உறுதி அளித்தார்.

    நெல்லை:

    களக்காடு நகராட்சி, சிதம்பராபுரம் நாராயண சுவாமி கோவில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அப்போது அந்த ஊரை சேர்ந்த கோபால் என்பவர், தான் சிறிய அளவில் வியாபாரம் செய்து வருவதாகவும், சைக்கிள் வாங்கி கொடுத்தால் தன்னுடைய வியாபாரத்திற்கு அது பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    புதிய சைக்கிள்

    அதனை ஏற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதன்படி நேற்று கோபாலுக்கு களக்காட்டில் தனது சொந்த செலவில் புதிய சைக்கி வாங்கி கொடுத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் வி.என்.கே. அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் சந்திர சேகர், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெ க்ஸ், கவுன்சி லர் மீகா, முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள் துரை, முகம்மது அலி, பாஸ்கரன், விபின், லீலாவதி மற்றும் களக்காடு நகராட்சி காங்கி ரஸ் கமிட்டி நிர்வாகி களும் கலந்து கொண்டனர்.

    • மேலப்பாளையம் மண்டலத்தில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள ஆய்வு செய்யப்படுகிறது
    • தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல்மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின்பேரில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) காளிமுத்து அறிவுறுத்தலின்படி மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரச குமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.

    அப்போது சுற்றுப்புறங் களில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி அகற்றினர்.

    மேலும், பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி னார்கள். புதிய கட்டிடங் களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகை யில் பராமரித்து கொள்ள வும் அறிவுரையும் வழங்கப்பட்டது.

    • தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறையினரால் சுற்று சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடை யே தலைய ணையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கின. இதையடுத்து களக்காடு தலையணை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    இதனிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தலையணைக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ளம் தணிந்ததால் இன்று காலை தலையணை நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்து ள்ளனர். 23 நாட்களுக்கு பிறகு தலையணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் சுமார் 4,500 கிலோ தக்காளி உழவர் சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
    • வரத்து குறைவால் தக்காளி ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது.

    நெல்லை:

    நெல்லையில் மகராஜநகர், மேலப்பாளையம், கண்டியப்பேரி, என்.ஜி.ஓ. காலனி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றது.

    இங்கு தினமும் சுமார் 4,500 கிலோ தக்காளி உழவர் சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் மகாராஜநகர் உழவர் சந்தையில் 2,800 கிலோவும், மேலப்பாளையத்தில் 1,200 கிலோவும், மீதமுள்ள 3 உழவர் சந்தைகளில் 500 கிலோ தக்காளியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது. இதனை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவ ட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக உழவர் சந்தைகளில், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற தக்காளி பழங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து எடுத்து மகராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் நுகர்வோருக்கு குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

    மாவட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தக்காளியில் மிக முக்கிய உணவு ஆதாரமான லைக்கோபின் என்ற ஆன்டி ஆக்ஸிடண்டு உள்ளது. இது இதய நோய் மற்றும் புற்று நோயின் அபாயத்தை குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது.

    இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.98-க்கு விற்கப்படுவதாக தோட்டக்கலை துணை இயக்கு நர் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.

    • வேப்பங்குளம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
    • ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது வேப்பங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் இறந்தவர்களின் உடலை அதன் அருகே உள்ள ஓடை வழியாக கொண்டு செல்ல வேண்டி இருப்பதாகவும், மழை காலங்களில் ஓடை களில் தண்ணீர் செல்லும் போது மிகுந்த சிரமப்படுவதாகவும் அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

    எனவே ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை சுடுகாட்டு பாதை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த விஜய குமார் என்பவர் இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டு ஓடையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்கு அவரது உறவி னர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இன்று காலை நெல்லை டவுன் தாசில்தார் வைகுண்டம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று அவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்பை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து ஓடை வழியாக விஜயக்குமார் உடலை சுமந்து சென்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

    • பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
    • கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்ப்புற மின் வினியோக செயற் பொறியாளர் முத்துக்குட்டி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்க ப்பட்டு ள்ளது. மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலா மணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம் புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்கு ளம், அன்னை நகர், தருவை, ஓம நல்லூர், கண்டித்தா ன்குளம், ஈஸ்வரியாபுரம்

    ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள் புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு(என்.ஜி.ஒ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியில் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாம ரைச் செல்வி ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டி க்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
    • கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்த கடல்கனி, வண்ணார்பேட்டை பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தரதரவென இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அவர் கேரளாவில் வியாபாரம் செய்து வருவதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்திரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எனது தந்தையின் பெயரில் இருந்த ஒரு சொத்தை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக சொன்னார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச்சென்று வெறுப்படைந்துவிட்டேன். இதனால் மன விரக்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். இதனை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×